எக்ஸ்குளுசிவ் செய்தி

மெரினாவில் 'பேனா' நினைவு சின்னம்: மக்கள் கருத்து கேட்க மத்திய அரசு உத்தரவு

Updated : செப் 17, 2022 | Added : செப் 16, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
சென்னை மெரினாவில், கருணாநிதி நினைவிடம் அருகில் கடலில், 137 அடி உயர 'பேனா' நினைவு சின்னம் அமைப்பது குறித்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மற்றும் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. 39 கோடி ரூபாயிலான திட்டத்துக்கு, மாவட்ட மற்றும் மாநில
சென்னை, மெரினா, பேனா நினைவு சின்னம்,  கருணாநிதி, மத்திய அரசு, Chennai, Marina, Pen Memorial, Karunanidhi, Central Govt

சென்னை மெரினாவில், கருணாநிதி நினைவிடம் அருகில் கடலில், 137 அடி உயர 'பேனா' நினைவு சின்னம் அமைப்பது குறித்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மற்றும் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. 39 கோடி ரூபாயிலான திட்டத்துக்கு, மாவட்ட மற்றும் மாநில அளவிலான கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம், நிபந்தனைகளுடன் ஜனவரியில் ஒப்புதல் வழங்கியது.


சூழலியல் அபாயம்நினைவிடம் அமையும் இடத்தில் இருந்து, 650 மீட்டர் தொலைவில் கடலில், 137 அடி உயரத்துக்கு கருணாநிதி நினைவாக, 80 கோடி ரூபாயில், பேனா சின்னம் அமைக்க, தமிழக
அரசு முடிவு செய்தது. இதற்கு மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம், பொதுப்பணித் துறை விண்ணப்பித்தது.கடலில் கட்டுமானங்கள் மேற்கொள்ள, மாநில அளவில் அனுமதி வழங்க முடியாது.

எனவே, இந்த விண்ணப்பத்தை சில நிபந்தனைகள் அடிப்படையில், மத்திய கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்ப, மாநில ஆணையம்
பரிந்துரைத்தது.இத்திட்டத்திற்கு விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், சூழலியல் அபாய மதிப்பீடு ஆய்வு, பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் அவசரகால செயல் திட்டம் தயாரிக்க வேண்டும்.மாசு கட்டுப்பாடு வாரியம் வாயிலாக, பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்திய பின், மத்திய அரசிடம் விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டது.


மத்திய குழு ஆய்வுஇந்நிலையில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின், கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணைய வல்லுனர்கள் அடங்கிய மதிப்பீட்டு குழு கூட்டம், 'ஆன்லைன்' முறையில், ஆக., 24ல் நடந்தது.இதில், பேனா சின்னம் அமைக்க அனுமதி கோரும் விண்ணப்பம் குறித்து ஆய்வு செய்த, 14 பேர் அடங்கிய வல்லுனர் குழு பிறப்பித்த உத்தரவு:மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக, மாநில அளவிலான கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணைய நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக, தமிழக பொதுப்பணித் துறை உறுதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில், இத்திட்டத்துக்கான விதிமுறைகள் பிறப்பிக்கப்படுகின்றன.


ஆறு விதிமுறை என்ன?* இத்திட்டம் தொடர்பாக, விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்தி, அதன் அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், கடலிலும், கடற்கரையிலும் பேரிடர் கால மேலாண்மைக்கான திட்டம் ஆகியவற்றை தயாரித்து, மாசு
கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக, பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்

* பேனா நினைவு சின்னத்தால், கடலில் துறைமுக பணிகள், மீன்பிடி துறைமுக பணிகள், மீன்பிடி படகு போக்குவரத்து ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கம் அடிப்படையில், விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் ஆகியவை தயாரிக்கப்பட வேண்டும்

* கடந்த 2006ல் பிறப்பிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிமுறைகள் அடிப்படையில், மீனவ சமுதாய மக்கள் பங்கேற்கும் வகையில், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும்

* இக்கூட்டத்தில் மக்கள் எழுப்பும் பல்வேறு பிரச்னைகளை, தமிழக அரசு உரிய முறையில் கருத்தில் வைத்து, அதன் அடிப்படையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், பேரிடர் மேலாண்மை திட்டம் ஆகியவற்றை, மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணைய ஆய்வுக்கு அனுப்பி பரிந்துரைகள் பெற வேண்டும்

* மெரினா கடலில் இந்த குறிப்பிட்ட இடத்தில், பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான தேவை என்ன என்பதை, உரிய காரணங்களுடன் அறிக்கையாக அளிக்க வேண்டும்

* இத்துடன் ஜூலை 25ல் மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் பரிந்துரைத்த, கூடுதல் விதிமுறைகளையும், தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.இவற்றுடன், இத்திட்டத்துக்கான மாற்று இடங்களை பரிசீலித்ததன் விபரம், நினைவு சின்னத்தில் பொது மக்கள் அதிகமாக கூடினால் ஏற்படும் பிரச்னைகள், அதை சமாளிப்பதற்கான ஏற்பாடுகள், கடலோர பாதுகாப்பு, கண்காணிப்பு
பணிகள், மீனவர்களின் படகு போக்குவரத்து ஆகியற்றுக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகளை விளக்க, 10 கூடுதல் விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.


தமிழக அரசு தயக்கம் ஏன்?சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக, மாநில அளவிலான கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் பிறப்பித்த நிபந்தனைகளை, தமிழக அரசு செயல்படுத்தவில்லை. இவற்றை செய்து விடுகிறோம் என்ற உத்தரவாதம் அளித்து, மத்திய ஆணையத்தின் வல்லுனர் குழுவிடம் விண்ணப்பித்தது.
மத்திய அரசின் வல்லுனர் குழுவின் உத்தரவால், இத்திட்டத்துக்கு விரிவான ஆய்வும், கருத்து கேட்பு கூட்டமும் நடத்த வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. பொது மக்கள், மீனவர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவுவதால், கருத்து கேட்பு கூட்டம் நடத்த, தமிழக அரசு தயங்குவதாக தெரிகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-202223:35:55 IST Report Abuse
kulandai kannan இதற்கு பதிலாக, திருவாரூர் ரயில் டிக்கெட் செக்கருக்கு சிலை வைக்கலாம்.
Rate this:
Cancel
Chandradas Appavoo - Kuzhithurai,இந்தியா
17-செப்-202222:33:03 IST Report Abuse
Chandradas Appavoo நட்டு மக்களின் வரிப்பணத்தில் இது தேவை இல்லை.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
17-செப்-202220:53:52 IST Report Abuse
Mohan Vivekanandan Mahalingam - chennai,இந்தியா 17-செப்-2022 11:20 81கோடி வரி பணத்தை விரயம் செய்யும் திட்டத்தை கை விட வேண்டும்". 81கோடி வரி பணத்தில் கைவிடத்தான் திட்டமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X