சூப்பர் ரிப்போர்டர் விசிட்

Added : செப் 16, 2022 | |
Advertisement
சாத்துார் : சாத்தூர் பழைய படந்தால் ரோட்டில் தார் ரோடு போடும் வேலை காலதாமதம் ஆகி வருவதால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த ரோட்டில் இரண்டு மேல்நிலைப் பள்ளிகள் 2 நடுநிலை பள்ளிகள் உள்ளன. மேலும் வணிக வளாகங்களும் அதிக அளவில் உள்ளது. நான்கு தனியார் மருத்துவமனைகள் உள்ளது. தனியார் ஸ்கேன் சென்டர் , மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இந்த ரோட்டில்
சூப்பர் ரிப்போர்டர் விசிட்

சாத்துார் : சாத்தூர் பழைய படந்தால் ரோட்டில் தார் ரோடு போடும் வேலை காலதாமதம் ஆகி வருவதால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த ரோட்டில் இரண்டு மேல்நிலைப் பள்ளிகள் 2 நடுநிலை பள்ளிகள் உள்ளன. மேலும் வணிக வளாகங்களும் அதிக அளவில் உள்ளது. நான்கு தனியார் மருத்துவமனைகள் உள்ளது. தனியார் ஸ்கேன் சென்டர் , மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இந்த ரோட்டில் உள்ளன.தென் வடல் புது தெரு, முன்சீப் கோர்ட் தெரு, காமராஜபுரம் முதல் தெரு , நடுத்தெரு, மூன்றாம் தெரு, கான்வென்ட் தெரு, கார் நேசன் கிளப் ரோடு, ஆகிய தெருக்களுக்கு பழைய படந்தால் ரோடு முக்கிய பாதையாக உள்ளது.

சிறியது முதல் கனரக வாகனங்கள் வந்து செல்லும் நிலையில் ஜல்லி கற்கள் பரப்பி ஒரு மதத்திற்கு மேலான நிலையில் தார் ரோடு போடும் பணி துவங்கப்படவில்லை.தனியார் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், இந்த வழியை பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் கற்கள் இடறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.



வாறுகால் வசதி தேவை


அப்துல் ரகுமான், சாத்தூர்: பழைய படந்தால் ரோட்டில் மழை நீர் வடிந்து செல்ல வாறுகால் வசதியில்லை. ரோட்டில் பெருகும் மழை நீர் வடிந்து செல்ல நீண்ட நேரம் ஆகிறது. மழை பெய்தால் இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சாலையில் ஓரத்தில் மழை நீர் வடிந்து செல்ல சிறிய அளவில் வாறுகால் அமைக்க வேண்டும்.


இருசக்கர வாகனங்கள் பாதிப்பு


வெங்கடேஷ், சாத்துார்: ரோட்டில் ஜல்லிக்கட்டு ஊசியாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆகி விடுகின்றன. ரோட்டில் கிடக்கும் கற்கள் மீது லாரி வேன் போன்ற வாகனங்கள் ஏறுவதால் அவை தெறித்து நடந்து செல்பவர்கள் மீது விழுந்து காயம் ஏற்படுகிறது. பழைய படந்தால் ரோட்டை பயன்படுத்தவே பலர் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.


வியாபாரம் பாதிப்பு


செய்யதுஅலி, சாத்துார்: ரோட்டில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு இருப்பதால் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியவில்லை. வாடிக்கையாளர்கள் வேறு பகுதிக்கு சென்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணியால் இந்தப் பகுதியில் கடை நடத்துபவர்களுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரே நாளில் ரோட்டை போட்டு விடுவோம் என்று பள்ளம் தோண்டினார்கள் ஒரு மாதம் ஆனது. ஜல்லி கற்கள் கொட்டும்போது மறுநாள் காலையில் ரோடு போடுவதாக கூறினார்கள் ஆனால் இன்றுவரை ரோடு போடவில்லை. வியாபாரம் பாதிக்கப்படுவதை தடுக்க உடனடியாக ரோடு போட வேண்டும்.


நாளைக்கு போடப்படும்


குருசாமி, நகராட்சித் தலைவர், சாத்துார்: பழையபடந்தால் ரோடு நாளைக்கு போடப்படும். என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X