கழிவு நீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி

Added : செப் 17, 2022 | |
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே டியூஷனுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் பலியானார்.ராமநாதபுரம் கழுகூரணி பாத்திமா நகர் வி.ஏ.ஒ.,- கோபாலகிருஷ்ணன். இவரது மகள் மற்றும் மகன் எழில்மாறன் 10. இருவரும் வாணி பகுதியில் ஒரு ஆசிரியை வீட்டில் டியூஷன் படித்து விட்டு வருவர்.வி.ஏ.ஓ., சென்று அழைத்து வருவார். செப்.,15 இரவு 9:00 மணிக்கு அவர்களை

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே டியூஷனுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் பலியானார்.

ராமநாதபுரம் கழுகூரணி பாத்திமா நகர் வி.ஏ.ஒ.,- கோபாலகிருஷ்ணன். இவரது மகள் மற்றும் மகன் எழில்மாறன் 10. இருவரும் வாணி பகுதியில் ஒரு ஆசிரியை வீட்டில் டியூஷன் படித்து விட்டு வருவர்.வி.ஏ.ஓ., சென்று அழைத்து வருவார். செப்.,15 இரவு 9:00 மணிக்கு அவர்களை அழைக்க சென்றார்.

டியூஷன் ஆசிரியை வீட்டு மாடியில் இருந்து மகள் மட்டும் இறங்கி வந்தார். மகன் குறித்து கேட்டார். பின்பக்கம் மகன் பாத்ரூம் சென்றதாக மகள் கூறினார். அங்கு சென்ற போது சிறுவன் கழிவுநீர்தொட்டியில் விழுந்து மயங்கி கிடந்தார். அரசு மருத்துவமனையில் அவர் இறந்தார். கழிவு நீர் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்து பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X