ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை உறுதி: கலெக்டர் தகவல்

Added : செப் 17, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட ஊராட்சி செயலர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், என, மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.காரமடை ஊராட்சி ஒன்றியம், மருதுார் ஊராட்சியில், பணிகள் ஒதுக்குவதில் நடந்த முறைகேடு தொடர்பாக ஊராட்சி செயலர் சதீஷ்குமாரை, சஸ்பெண்ட் செய்ய, மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். இதை அடுத்து காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த

மேட்டுப்பாளையம்:'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட ஊராட்சி செயலர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், என, மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.காரமடை ஊராட்சி ஒன்றியம், மருதுார் ஊராட்சியில், பணிகள் ஒதுக்குவதில் நடந்த முறைகேடு தொடர்பாக ஊராட்சி செயலர் சதீஷ்குமாரை, சஸ்பெண்ட் செய்ய, மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். இதை அடுத்து காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த ஊராட்சி செயலர்கள் கூட்டத்தில், நேற்று முன்தினம் சதீஷ்குமார் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யும் வரை, விடுப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.ஆனால் நேற்று வழக்கம் போல் ஊராட்சி செயலர்கள், வேலைக்கு சென்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் வந்த மாவட்ட கலெக்டர் சமீரனிடம் நிருபர்கள், ஊராட்சி செயலர் சதீஷ்குமார் சஸ்பெண்ட் குறித்து கேட்டபோது, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X