25,000 லி., கொள்ளளவுடன் சுத்திகரிப்பு அமைப்பு உரமாகும் கழிவுகள்! பிரம்மாண்ட குழி தோண்டும் பணிகள் தீவிரம்

Added : செப் 17, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம்:மனித கழிவுகளை சுத்திகரித்து உரமாக மாற்றும் திட்டம் விரிவுபடுத்த, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், பிரம்மாண்ட குழி தோண்டும் பணி வேகமெடுத்துள்ளது.பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மனிதக் கழிவு சுத்திகரிப்பு நிலையம் கடந்த, 2017ம் ஆண்டு, 2 கோடியே, 48 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.தற்போது
 25,000 லி., கொள்ளளவுடன் சுத்திகரிப்பு அமைப்பு உரமாகும் கழிவுகள்! பிரம்மாண்ட குழி தோண்டும் பணிகள் தீவிரம்

பெ.நா.பாளையம்:மனித கழிவுகளை சுத்திகரித்து உரமாக மாற்றும் திட்டம் விரிவுபடுத்த, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், பிரம்மாண்ட குழி தோண்டும் பணி வேகமெடுத்துள்ளது.பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மனிதக் கழிவு சுத்திகரிப்பு நிலையம் கடந்த, 2017ம் ஆண்டு, 2 கோடியே, 48 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.
தற்போது இதே வளாகத்தில் கூடுதலாக, 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மனித கழிவு சுத்திகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளன. இதற்காக பிரம்மாண்ட குழி தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இத்திட்டத்தை செயல்படுத்தும் போது பேரூராட்சி பகுதியில் உள்ள பொது கழிப்பிடங்கள் மற்றும் தனியார் கழிப்பிடங்களின் கழிவுகளை இத்திட்டம் செயல்படும் இடத்திற்கு கொண்டு சென்று, கழிவுகளை திட, திரவ கழிவுகளாக பிரித்து, அவைகளை உரமாக மாற்றி, விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவது தடுப்பதுடன், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் விஷ்வ பிரகாஷ் கூறியதாவது:தமிழகத்தில் முதல் முதலாக பெரியநாயக்கன்பாளையத்தில் இத்திட்டம் செயல்படுத்தினோம். தற்போது விரிவுபடுத்தப்பட்டு உள்ளதால், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், கூடலுார் நகராட்சி, நம்பர், 4 வீரபாண்டி பேரூராட்சி ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அப்பகுதியில் உள்ள கழிவு நீர் டேங்குகளை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதுவரை கழிவு நீரை அகற்ற, இங்கிருந்து, கோவை உக்கடம் பகுதிக்கு லாரிகள் சென்றன. தற்போது, கழிவு நீரை இங்கேயே அகற்றலாம்.
லாரி ஒன்றுக்கு, 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கழிவு நீர் நவீன தொழில்நுட்பம் வாயிலாக திட, திரவங்களாக மாற்றப்பட்டு, திரவங்கள் சுத்திகரிக்கப்பட்டு செடி, கொடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. திடப்பொருள்கள் இயற்கை மற்றும் மண்புழு உரங்களுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இதில், இயற்கை உரம் கிலோ மூன்று ரூபாய்க்கும், மண்புழு உரம் கிலோ, 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கழிவு நீரை பொது இடங்களில் வெளியேற்றி, பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்க கூடாது. அவ்வாறு தீங்கு விளைவிக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X