ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மக்கள் தொகை தின போட்டி

Added : செப் 17, 2022 | |
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக மக்கள் தொகை தின பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.கோவை குடும்பநலம் துணை இயக்குனர் டாக்டர் கவுரி தலைமை வகித்தார். டாக்டர்கள் சித்ரா, சிவச்சந்திரன், பிரித்திகா முன்னிலை வகித்தனர்.டாக்டர் சமித்தா, மக்கள் தொகை நிலவரம், சிறு குடும்ப நெறி,
ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மக்கள் தொகை தின போட்டி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக மக்கள் தொகை தின பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.கோவை குடும்பநலம் துணை இயக்குனர் டாக்டர் கவுரி தலைமை வகித்தார். டாக்டர்கள் சித்ரா, சிவச்சந்திரன், பிரித்திகா முன்னிலை வகித்தனர்.டாக்டர் சமித்தா, மக்கள் தொகை நிலவரம், சிறு குடும்ப நெறி, திருமண வயது, குடும்ப நல முறைகள், முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி குறித்தும் விளக்கினார்.
தொடர்ந்து, பெண் கல்வி ஊக்குவித்தல், ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலை, தாய் சேய் நலம், இளம் வயது திருமணம் தவிர்த்தல் குறித்து விளக்கி பேசினார். பெண் குழந்தை பாதுகாப்பு, மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் சமூக பொருளாதார சீர்கேடுகள் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்த தலைப்பின் கீழ், பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.மாணவி சவுமியா முதலிடமும், சுதிர் சித்தார்த் இரண்டாமிடமும், அஸ்வந்த் விஷ்ணு மூன்றாமிடமும், சிவசங்கரி ஆறுதல் பரிசும் பெற்றனர். தொடர்ந்து, குடும்ப நெறிமுறைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பங்கேற்றவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உலக மக்கள் தொகை தினம் குறித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.மாவட்ட அலுவலக விரிவாக்க கல்வியாளர் ராணி, சமுதாய நல செவிலியர் ரேவதி, மருத்துவமில்லாத மேற்பார்வையாளர் கண்ணன், பகுதி சுகாதார செவிலியர் ஜெயலட்சுமி, செவிலியர் முத்து செல்வி பங்கேற்றனர். வட்டார விரிவாக்க கல்வியாளர் ஜோதிமணி நன்றி தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X