பயணியர் நிழற்கூரை வசதி இல்லாததால் மக்கள் அவதி

Added : செப் 17, 2022 | |
Advertisement
வெயிலில் மக்கள் அவதிபொள்ளாச்சி -- கோவை ரோடு, வடக்கிபாளையம் பிரிவு பஸ் ஸ்டாப்பில், பல ஆண்டுகளாக பயணியர் நிழற்கூரை அமைக்கப்படவில்லை. ரோடு விரிவாக்க பணி நிறைவடைந்த பிறகும், நிழற்கூரை கட்ட உள்ளாட்சி நிர்வாகம் அக்கறை செலுத்தாமல் இருப்பது வேதனையளிக்கிறது.- ஜமீலா, பொள்ளாச்சி.ரோடு சந்திப்பில் குழப்பம்பொள்ளாச்சியில், முக்கிய ரோடுகள் சந்திப்பாக உள்ள, கோவை
பயணியர் நிழற்கூரை வசதி இல்லாததால் மக்கள் அவதி


வெயிலில் மக்கள் அவதி



பொள்ளாச்சி -- கோவை ரோடு, வடக்கிபாளையம் பிரிவு பஸ் ஸ்டாப்பில், பல ஆண்டுகளாக பயணியர் நிழற்கூரை அமைக்கப்படவில்லை. ரோடு விரிவாக்க பணி நிறைவடைந்த பிறகும், நிழற்கூரை கட்ட உள்ளாட்சி நிர்வாகம் அக்கறை செலுத்தாமல் இருப்பது வேதனையளிக்கிறது.- ஜமீலா, பொள்ளாச்சி.


ரோடு சந்திப்பில் குழப்பம்


பொள்ளாச்சியில், முக்கிய ரோடுகள் சந்திப்பாக உள்ள, கோவை ரோடு மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில், நிரந்தர போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு இல்லாததால், வாகனங்கள் இஷ்டம் போல ரோட்டின் குறுக்கே இயக்கப்படுகின்றன. விபத்து அபாயம் அதிகரித்துள் ளது.- வெங்கிடுசாமி, மகாலிங்கபுரம்.


பாலம் அமைக்கப்படுமா?


பொள்ளாச்சி - கோவை ரோடு நஞ்சேகவுண்டன்புதுாரை கடக்கும், பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் பாதையில், ரயில்வே பாலம் அமைக்காமல், இன்னும் ரயில்வே கேட் செயல்படுகிறது. ரயில்கள் வரும் நேரங்களில் வாகன ஓட்டுனர்கள் வெயிலிலும், மழையிலும் திறந்தவெளியில் காத்திருக்க வேண்டியுள்ளது.- ஆனந்தகுமார், நஞ்சேகவுண்டன்புதுார்.


அணையாத தெருவிளக்குகள்


பொள்ளாச்சி, ஓம்பிரகாஷ் தியேட்டரில் இருந்து, ஜோதி நகர் செல்லும் திட்ட சாலையில் உள்ள தெருவிளக்குகள், பகலிலும் அணைக்கப்படாமல் ஒளிர்கின்றன. இதனால், மின்சாரம் வீணாவதுடன், தெருவிளக்குகளும் பழுதாகின்றன.- ராம்பிரகாஷ், பொள்ளாச்சி.


ரோடு படுமோசம்


பொள்ளாச்சி - உடுமலை நெடுஞ்சாலையில், சின்னாம்பாளையம் பகுதியில் ரோடு பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாவதுடன், விபத்து அபாயமும் நிலவுகிறது.- கணேசன், சின்னாம்பாளையம்.


மழை காலத்தில் இம்சை


பொள்ளாச்சி, கரியகாளியம்மன் கோவில் வீதியில், சாக்கடை வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளாமல் உள்ளது. இதனால், மழை பெய்யும் போது சாக்கடை கால்வாய்கள் நிரம்பி, கழிவுநீர் கலந்த மழைநீர் வீடுகளில் புகுந்து விடுகிறது.- சங்கமித்ரா, பொள்ளாச்சி.


சுகாதாரம் சீர்கேடு


ஆனைமலை அடுத்துள்ள, வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட சரளைப்பதி ஊராட்சி துவக்கப்பள்ளி ரோட்டில், குப்பை உள்ளிட்ட கழிவு குவிக்கப்பட்டுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பை அகற்றி, சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.- ராஜாமணி, வேட்டைக்காரன்புதுார்.


ரோடு சீரமைக்கணும்!


பொள்ளாச்சி நகராட்சி, திருநீலகண்டர் வீதியில் ரோடு படுமோசமாக சிதைந்து காணப்படுவதால், வாகன ஓட்டுனர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நகராட்சி நிர்வாகம் ரோட்டை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.- பவித்ரா, பொள்ளாச்சி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X