தமிழகத்தில் நான்கு முதல்வர்கள் ஆர்ப்பாட்டத்தில் பழனிசாமி பட்டியல்

Added : செப் 17, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
செங்கல்பட்டு:''சட்டம் - ஒழுங்கில் சீர்கெட்டு வரும் தமிழகத்தை நான்கு முதல்வர்கள் ஆளுகின்றனர். ஸ்டாலின் பொம்மை முதல்வராக உள்ளார்'' என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் செங்கல்பட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி பேசியதாவது:தமிழகத்திற்கு நான்கு முதல்வர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் நான்கு முதல்வர்கள் ஆர்ப்பாட்டத்தில் பழனிசாமி பட்டியல்

செங்கல்பட்டு:''சட்டம் - ஒழுங்கில் சீர்கெட்டு வரும் தமிழகத்தை நான்கு முதல்வர்கள் ஆளுகின்றனர். ஸ்டாலின் பொம்மை முதல்வராக உள்ளார்'' என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.

மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் செங்கல்பட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி பேசியதாவது:தமிழகத்திற்கு நான்கு முதல்வர்கள் உள்ளனர். ரியல் எஸ்டேட்டுக்கு ஒரு முதல்வர்; சினிமாத் துறைக்கு ஒரு முதல்வர்; முதல்வரை நிர்வகிக்க ஒரு முதல்வர்; பொம்மை முதல்வராக ஸ்டாலின் ஆகியோர் உள்ளனர்.

தி.மு.க.வின் குடும்ப ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் 'கமிஷன் கலெக் ஷன் கரப்ஷன்' தான் நடக்கிறது. அனைத்து துறைகளிலும் லஞ்சம் பெருகி விட்டது. தி.மு.க. அரசு பொது மக்களுக்கு அளித்த முதல் 'போனஸ்' சொத்து வரி; இரண்டாவது போனஸ் மின் கட்டண உயர்வு.பொங்கல் என்றாலே 'திராவிட மாடல்' ஆட்சி தான் நினைவுக்கு வருகிறது.

தி.மு.க. அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் வெல்லம் ஒழுகியது; அரிசியில் வண்டு; கடுகுக்கு பதில் இலவம் பஞ்சு விதைகள் என தரமற்ற பொருட்களை வழங்கினர்.நான்கு மாதங்களில் 'ஆன்லைன்' சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்றப் போவதாக சட்ட அமைச்சர் கூறினார்; 15 மாதங்கள் ஆகியும் நிறைவேற்றவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mukundan - Chennai,இந்தியா
17-செப்-202216:55:17 IST Report Abuse
Mukundan உன்னை கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் உள்ளே பிடிச்சு போட்டு நொங்கெடுத்தால் சரியாயிடும்...
Rate this:
Cancel
Mukundan - Chennai,இந்தியா
17-செப்-202216:54:27 IST Report Abuse
Mukundan ...அதைச்சொல்லு....
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
17-செப்-202206:15:55 IST Report Abuse
Bharathi EPS சரியாதான் சொல்லியிருக்கிறார். ட ம்மி பீசு தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X