உடுமலையில் புத்தகத்திருவிழா துவக்கம்

Added : செப் 17, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலையில், 10 நாட்கள் புத்தக திருவிழா துவங்கியது.உடுமலையில், பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் உடுமலை புத்தகாலயம் சார்பில், 9வது புத்தக திருவிழா தேஜஸ் மகாலில் (நகராட்சி திருமண மண்டபம்) நேற்று மாலை, 6:00 மணிக்கு துவங்கியது.இவ்விழாவை, நகராட்சித்தலைவர் மத்தீன் துவக்கி வைத்தார். முன்னதாக மாலை, 4:00 மணிக்கு, பஸ் ஸ்டாண்டில் இருந்து, கலைப்பேரணி நடந்தது. இத்திருவிழாவில், 50க்கும்

உடுமலை:உடுமலையில், 10 நாட்கள் புத்தக திருவிழா துவங்கியது.உடுமலையில், பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் உடுமலை புத்தகாலயம் சார்பில், 9வது புத்தக திருவிழா தேஜஸ் மகாலில் (நகராட்சி திருமண மண்டபம்) நேற்று மாலை, 6:00 மணிக்கு துவங்கியது.இவ்விழாவை, நகராட்சித்தலைவர் மத்தீன் துவக்கி வைத்தார். முன்னதாக மாலை, 4:00 மணிக்கு, பஸ் ஸ்டாண்டில் இருந்து, கலைப்பேரணி நடந்தது. இத்திருவிழாவில், 50க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.சிறப்பு நிகழ்வாக, மடத்துக்குளம் பகத்சிங் களரி குழுவினரின் சிலம்பாட்டம் நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த புத்தக திருவிழா, வரும் 25ம் தேதி வரை, பத்து நாட்கள் நடக்க உள்ளது. நாள்தோறும், மாலை, 6:00 மணிக்கு, புத்தக திருவிழா நடக்கும் வளாகத்தில், வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு கருத்தரங்கம், சொற்பொழிவு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்துள்ளனர். இப்புத்தக திருவிழாவில், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X