‛நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி: அரசு பள்ளிகளில் ஏற்பாடு

Updated : செப் 17, 2022 | Added : செப் 17, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை- தனியார் நிறுவனங்களை போல், அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்து உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில், தேசிய அளவில் 56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.தமிழகத்தில், 1.32 லட்சம் பேர் தேர்வு எழுதி, 68

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை- தனியார் நிறுவனங்களை போல், அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.



latest tamil news



பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில், தேசிய அளவில் 56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.தமிழகத்தில், 1.32 லட்சம் பேர் தேர்வு எழுதி, 68 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 51 சதவீதம். அரசு பள்ளி மாணவர்களை பொறுத்தவரை, 23 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்ச்சியை அதிகரிக்க, பள்ளிக் கல்வி துறை திட்டமிட்டுள்ளது.


latest tamil news



இதற்காக, நாடு முழுதும் நீட் பயிற்சியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் ஆசிரியர்களை நியமித்து, தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்க உள்ளனர்.இந்த பயிற்சி, அடுத்த மாதம் முதல் துவங்கப்பட உள்ளது.

தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் போல், அரசு பள்ளி மாணவர்களும், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வில், அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதாக, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
17-செப்-202213:59:44 IST Report Abuse
spr இதனை நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் மத்திய அரசு அதனைக் கட்டாயமாக்கும் முன்பே (ஹிந்தி பிரசார சபை போல ஒரு அமைப்பின் மூலம்) செய்திருக்க வேண்டும் எந்த ஒரு திட்டத்திற்கும் தக்க முன்னேற்பாடுகளை செய்யாமல் மக்களைத் தவிக்க வைப்பதுவும் கட்டாயப்படுத்துவதுவும் மோடியின் "உலக மகா புத்திசாலித்தனம்" அவர்தான் சாதனை மன்னர் போய்த் தொலையட்டும் தமிழகத்தில் இது மத்திய அரசின் திணிப்பு என்று எல்லோரும் கருதும் நிலையில் திரைத்துறை அகர உகர மகாரங்கள் கூட எந்த முயற்சியும் எடுக்காது என்பதுவும் அறிந்த ஒன்றே .....
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
17-செப்-202213:04:41 IST Report Abuse
sankaranarayanan வழுக்கி வந்துவிட்டார்கள் நல்ல வழிக்கு இனி முதல் கையெழுத்து என்று பேசவே மாட்டார்கள். எப்போதே செய்திருந்தால் மாணவர்கள் பலர் முன்னேறி இருப்பார்கள். இனியும் கவுரவம் பார்க்காமல் நல்ல ஆசிரியர்களை அமர்த்தி பயிற்சி பள்ளிகளை காலம் தாழ்த்தாமல் ஆரம்பியுங்கள்.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
17-செப்-202212:30:10 IST Report Abuse
sankar இது எத்தனையாவது கையெழுத்து - மிஸ்டர் ஸ்மால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X