நரிக்குறவர்களுக்கு பா.ஜ.,வினர் வாழ்த்து | Dinamalar

நரிக்குறவர்களுக்கு பா.ஜ.,வினர் வாழ்த்து 

Added : செப் 17, 2022 | |
திருப்பூர்;நரிக்குறவர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க, பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.இதனை கொண்டாடும் விதமாக, மத்திய அரசு ஒப்புதல் அளித்த செய்தியை நரிக்குறவர் மக்களுக்கு தெரியப்படுத்த, பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்ட ஓ.பி.சி., அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட்
நரிக்குறவர்களுக்கு பா.ஜ.,வினர் வாழ்த்து 

திருப்பூர்;நரிக்குறவர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க, பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.இதனை கொண்டாடும் விதமாக, மத்திய அரசு ஒப்புதல் அளித்த செய்தியை நரிக்குறவர் மக்களுக்கு தெரியப்படுத்த, பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்ட ஓ.பி.சி., அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், நரிக்குறவர்களுக்கு சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி பா.ஜ., வினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில், ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் கார்த்திக், பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்வேல், இளைஞரணி செயலாளர் அருண்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X