குறுமைய விளையாட்டுப் போட்டிபரிசுகளை அள்ளிய அரசு பள்ளி மாணவர்கள்

Added : செப் 17, 2022 | |
Advertisement
அவிநாசி:குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில், பெரியாயிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பரிசுகளை அள்ளினர்.அவிநாசி, குறுமைய அளவிலான விளையாட்டு போட்டியை, எம்.எஸ்., வித்யாலயா பள்ளி ஏற்று நடத்தியது. போட்டியில் பங்கேற்ற, பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை தட்டிச் சென்றனர்.கேரம் போட்டியில், 14

அவிநாசி:குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில், பெரியாயிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பரிசுகளை அள்ளினர்.அவிநாசி, குறுமைய அளவிலான விளையாட்டு போட்டியை, எம்.எஸ்., வித்யாலயா பள்ளி ஏற்று நடத்தியது. போட்டியில் பங்கேற்ற, பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை தட்டிச் சென்றனர்.கேரம் போட்டியில், 14 வயதுக்குபட்டோர் பிரிவில், மாணவர் இரட்டையர் பிரிவில் தீபக், ஹேமந்த்குமார் முதலிடம், மாணவியர் பிரிவில் வர்ஷா, கவுசிகா முதலிடம், 14 வயது மாணவியர் ஒற்றையர் பிரிவில், வர்ஷா முதலிடம், 17 வயது மாணவர் இரட்டையர் பிரிவில் துஷ்யந்த்பாபு, நிதிஷ்குமார் இரண்டாமிடம் பெற்றனர்.கபடி போட்டியில், பதினேழு வயது மாணவர் பிரிவில் முதலிடம், 14 வயது மாணவியர் பிரிவில் முதலிடம், 19 வயது மாணவியர், கால்பந்து போட்டியில் இரண்டாமிடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற அணியினர், அடுத்த மாதம் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைமையாசிரியர் குமரேசன், உதவி தலைமையாசிரியர்கள் சுமித்ரா, இளங்கோவன், சண்முகநாதன், மணிகண்டன், உடற்கல்வி ஆசிரியர் சசிகுமார் ஆகியோர் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X