'பெட்ரோல் தீர்ந்தால் வண்டி ஓடாது':ஊட்டச்சத்து குறித்து 'அட்வைஸ்'

Added : செப் 17, 2022 | |
Advertisement
பல்லடம்:''பெட்ரோல் தீர்ந்துவிட்டால் வண்டி ஓடாது'' என, பல்லடம் அருகே அரசு பள்ளியில் நடந்த ஊட்டச்சத்து உணவு குறித்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பல்லடம், ராயர்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் தாரகேஸ்வரி தலைமை வகித்தார். ரெயின்போ ரோட்டரி தலைவர் ஆறுமுகம், செயலாளர்
'பெட்ரோல் தீர்ந்தால் வண்டி ஓடாது':ஊட்டச்சத்து குறித்து 'அட்வைஸ்'

பல்லடம்:''பெட்ரோல் தீர்ந்துவிட்டால் வண்டி ஓடாது'' என, பல்லடம் அருகே அரசு பள்ளியில் நடந்த ஊட்டச்சத்து உணவு குறித்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பல்லடம், ராயர்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் தாரகேஸ்வரி தலைமை வகித்தார். ரெயின்போ ரோட்டரி தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார்.பல்லடம், எஸ்.வி., கிளினிக் மருத்துவர் பாலமுரளி பேசியதாவது:பசி இல்லையெனில் காலையில் சிறிது துாரம் ஓடுங்கள். பெட்ரோல் தீர்ந்து விட்டால் வண்டி ஓடாது. அதுபோல், ஊட்டச்சத்து இல்லையெனில் உடல் வேலை செய்யாது. காலை சிற்றுண்டி சாப்பிடுவதை தவிர்க்க கூடாது.உடலுக்கு ஒவ்வாத, கடைகளில் விற்கும் உணவு பண்டங்களை சாப்பிடாதீர்கள். தினசரி ஒரு காய், கீரை, பருப்பு வகையும், ஏதாவது ஒரு வகையில் முட்டையும் சாப்பிட வேண்டும். எதை சாப்பிடுவதாக இருந்தாலும் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள்.குடிக்க நன்றாக இருப்பதால் குளிர்பானங்களை குடித்து உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாம். இளநீர், நுங்கு, பழங்கள் என, இயற்கையான உணவு பொருட்களை ஏராளமாக உள்ளன. பிடிக்கும் என்பதற்காக உடலுக்கு தீங்கு ஏற்படும் உணவுகளை சாப்பிட வேண்டாம்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X