நான்கு வழிச்சாலை பணி தீவிரம்: பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்

Added : செப் 17, 2022 | |
Advertisement
பல்லடம்:பல்லடம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.இதனால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, கனரக வாகனங்கள் மாற்று வழித்தடத்தில் செல்ல போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு கூறியதாவது:திருப்பூர், திருச்சி, மதுரை, கோவைக்கு இடையே சரக்கு போக்கு வரத்து அதிக
நான்கு வழிச்சாலை பணி தீவிரம்: பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்

பல்லடம்:பல்லடம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.இதனால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, கனரக வாகனங்கள் மாற்று வழித்தடத்தில் செல்ல போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு கூறியதாவது:திருப்பூர், திருச்சி, மதுரை, கோவைக்கு இடையே சரக்கு போக்கு வரத்து அதிக அளவில் நடந்து வருகிறது. இதன் காரணமாக, கன்டெய்னர், சரக்கு வேன்கள், டிப்பர் லாரிகள் என, அதிகப்படியான கனரக வாகனங்கள் பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்கின்றன.நான்கு வழிச்சாலை பணிகள் துவங்கியுள்ளதால், திருப்பூர், திருச்சி, மதுரையில் இருந்து வரும் கனரக வாகனங்கள், பொள்ளாச்சி செல்லும் பழைய பைபாஸ் ரோட்டில் திரும்பி, காமநாயக்கன்பாளையம், கரடிவாவி, செட்டிபாளையம் ரோடு வழியாக கோவை செல்ல வேண்டும்.இதேபோல், கோவையிலிருந்து திருச்சி, மதுரை செல்லும் வாகனங்கள் காரணம்பேட்டை, கரடிவாவி, காமநாயக்கன்பாளையம் வழியாகவும், திருப்பூர் செல்லும் வாகனங்கள் காரணம்பேட்டை, சாமளாபுரம், மங்கலம் வழியாகவும் செல்ல வேண்டும். கனரக வாகனங்களுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடு பொருந்தும். வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, வழித்தடங்களில் தேவையான வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X