இயற்கை செல்வத்தை ஈட்டுவதிலும் திருப்பூர் முன்னணி!

Added : செப் 17, 2022 | |
Advertisement
திருப்பூர்;மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, இயற்கை செல்வத்தை ஈட்டுவதிலும், திருப்பூர், லட்சாதிபதியாக திகழ்கிறது.இயற்கை நமக்கு அளித்த மாபெரும் செல்வம், மரம். வெயிலுக்கு நிழலாக, பிணிக்கு மருந்தாக, உணர்வுக்கு விருந்தாக, விளையாடி மகிழ துாளியாக என மனித குலத்துக்கு, எல்லாமுமாகி நிற்கின்றது மரம்.அதனால்தான், வனத்துக்குள் திருப்பூர் என்கிற திட்டத்தை உருவாக்கி, லட்சக்கணக்கில்
இயற்கை செல்வத்தை ஈட்டுவதிலும் திருப்பூர் முன்னணி!

திருப்பூர்;மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, இயற்கை செல்வத்தை ஈட்டுவதிலும், திருப்பூர், லட்சாதிபதியாக திகழ்கிறது.இயற்கை நமக்கு அளித்த மாபெரும் செல்வம், மரம். வெயிலுக்கு நிழலாக, பிணிக்கு மருந்தாக, உணர்வுக்கு விருந்தாக, விளையாடி மகிழ துாளியாக என மனித குலத்துக்கு, எல்லாமுமாகி நிற்கின்றது மரம்.அதனால்தான், வனத்துக்குள் திருப்பூர் என்கிற திட்டத்தை உருவாக்கி, லட்சக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, பசுமையெனும் செல்வத்தை பெருக்கிவருகிறது, வெற்றி அமைப்பு. இரண்டு லட்சம் மரக்கன்றுகளை நடுவது, வனத்துக்குள் திருப்பூர் திட்டம் 8ல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் நான்கு கள மேலாளர்கள், ஒரு மேலாளரின் கீழ் தலா 10 வீதம் மொத்தம் 40 தன்னார்வ ஊழியர்கள் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்லடம் அருகே சுக்காம்பாளையத்தில் ஆறுமுகம், கமலம் ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்தில், மரம் நடும் விழா நேற்று நடந்தது. மொத்தம் 500 செம்மரங்கள் நடப்பட்டன.திட்டம் துவங்கிய மிக குறுகிய காலத்திலேயே, ஒரு லட்சத்துக்குமேல் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதனால், இயற்கை செல்வத்தை ஈட்டுவதிலும், பின்னல் நகரான திருப்பூர், லட்சாதிபதியாக மிளிர்கிறது. லட்சிய இலக்கை விரைந்து எட்ட, வாரந்தோறும் பல ஆயிரம் மரக்கன்று நடப்படுகிறது.மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, இயற்கை செல்வத்தை ஈட்ட விரும்புவோர்,90470 86666என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X