தி.மு.க., ஆட்சிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி முடிவுகட்டுவார் :திருப்பூரில் தினகரன் ஆரூடம்

Added : செப் 17, 2022 | |
Advertisement
திருப்பூர்:அ.ம.மு.க., சார்பில், அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.மாநகர் மாவட்ட செய லாளர் விசாலாட்சி வரவேற்றார். துணை பொது செயலாளர் சண்முகவேலு, சேலஞ்சர் துரை உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். ரோகிணி கிருஷ்ணகுமார், செந்தில்குமார், செல்வபாண்டி உள்ளிட்ட அமைப்பு பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில், பொது செயலாளர் தினகரன்
தி.மு.க., ஆட்சிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி முடிவுகட்டுவார் :திருப்பூரில் தினகரன் ஆரூடம்

திருப்பூர்:அ.ம.மு.க., சார்பில், அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.மாநகர் மாவட்ட செய லாளர் விசாலாட்சி வரவேற்றார். துணை பொது செயலாளர் சண்முகவேலு, சேலஞ்சர் துரை உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். ரோகிணி கிருஷ்ணகுமார், செந்தில்குமார், செல்வபாண்டி உள்ளிட்ட அமைப்பு பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில், பொது செயலாளர் தினகரன் பேசியதாவது:கடந்த 1996 - 2001 ஆட்சியில் ஏற்பட்ட மின் வெட்டு தமிழகத்தில் தொழில்களை அழித்து, தி.மு.க., ஆட்சிக்கும் முடிவு கட்டியது.
தற்போது மின் கட்டண உயர்வு, மின் வெட்டு போன்றவற்றால் இந்த ஆட்சிக்கும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முடிவு கட்டுவார்.கூட்டணியில் உள்ள மா.கம்யூ., பாலகிருஷ்ணன், சொத்து வரி உயர்வுக்கு பேசாமல் இருந்து விட்டு, மின் கட்டண உயர்வுக்கு மட்டும் வேறு வழியின்றி ஒரு எதிர்ப்பை வெளியிட்டு, அதோடு விட்டார்.காங்., கட்சியினர் பாதயாத்திரை சென்று விட்டனர். இங்கு யாரும் இல்லை. வீரமணி, திருமாவளவன் போன்றோருக்கு சனாதனம் எதிர்ப்பு மட்டுமே தெரிகிறது. முத்தரசன் வாயை திறப்பதில்லை. இந்த கட்சிகள் அனைத்தும் அடுத்த முறை மண்ணை கவ்வும்.சொத்து வரி, மின் கட்டண உயர்வு என மக்களை நசுக்கி, இதனை திராவிட மாடல் ஆட்சி என்கிறார் ஸ்டாலின். ஹிட்லரை விட மோசமான ஆட்சி நடத்துகிறார். பல ஆயிரம் கோடி செலவு செய்து தேர்தலை சந்தித்த அ.தி.மு.க., இன்று உரிய தலைமை இன்றி தவிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X