கல்குவாரிக்கு எதிர்ப்பு பெண்களும் உண்ணாவிரதம்

Added : செப் 17, 2022 | |
Advertisement
பல்லடம்;விதிமுறை மீறி இயங்கும் கல்குவாரியால் பாதிக்கப்படுவதால், குவாரி உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி, கோடங்கிபாளையத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார், 11வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.அவருடன், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறியதாவது:விவசாய நிலத்துக்கு செல்லும் பொதுவழித்தடத்தை உடைத்து ஆக்கிரமித்துள்ளனர். விதிமுறைப்படி
கல்குவாரிக்கு எதிர்ப்பு பெண்களும் உண்ணாவிரதம்

பல்லடம்;விதிமுறை மீறி இயங்கும் கல்குவாரியால் பாதிக்கப்படுவதால், குவாரி உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி, கோடங்கிபாளையத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார், 11வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.அவருடன், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறியதாவது:விவசாய நிலத்துக்கு செல்லும் பொதுவழித்தடத்தை உடைத்து ஆக்கிரமித்துள்ளனர். விதிமுறைப்படி செந்தில்குமார் வீடு அமைந்துள்ளது. 500 மீட்டருக்குள் கட்டடங்கள் எதுவும் இல்லை என கனிமவளத்துறை அதிகாரிகள் சான்று அளித்துள்ளனர்.அதிகாரிகள் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளதாக சந்தேகம் உள்ளது. குடியிருப்பு இருக்கும்போது எதற்காக குவாரிக்கு அனுமதி கொடுத்தனர் என்று தெரியவில்லை. எனவே, விதிமுறை மீறி இயங்கி வரும் குவாரியின் உரிமையை ரத்து செய்ய வேண்டும். விதிகளுக்கு உட்பட்டு குவாரிகள் இயங்கட்டும், என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X