'டிஜே நைட் பார்ட்டி' விவகாரம்: போலீசில் தி.மு.க., - கம்யூ., புகார்

Added : செப் 17, 2022 | |
Advertisement
திருப்பூர்;திருப்பூர் ஓட்டலில், 'டிஜே பார்ட்டி, பெண்களுக்கு இலவச மதுபானம்' என்ற அறிவிப்பை தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் மற்றும் கலெக்டரிடம் தி.மு.க., மற்றும் கம்யூ., மாதர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.திருப்பூர், மங்கலம் சாலையில் உள்ள 'டிவின் பெல்ஸ்' என்ற ஓட்டலில், இன்று (17ம் தேதி) இரவு 'டிஜே இரவு விருந்து' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பெண்களுக்கு இலவச

திருப்பூர்;திருப்பூர் ஓட்டலில், 'டிஜே பார்ட்டி, பெண்களுக்கு இலவச மதுபானம்' என்ற அறிவிப்பை தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் மற்றும் கலெக்டரிடம் தி.மு.க., மற்றும் கம்யூ., மாதர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.திருப்பூர், மங்கலம் சாலையில் உள்ள 'டிவின் பெல்ஸ்' என்ற ஓட்டலில், இன்று (17ம் தேதி) இரவு 'டிஜே இரவு விருந்து' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பெண்களுக்கு இலவச மது பானம் என்றும் தகவல் வெளியானது. பொதுமக்கள் கொந்தளித்து, தங்களது எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்பினரும் கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர். திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், ஓட்டல் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்வேல் கூறுகையில், ''இந்த அறிவிப்பு குறித்து, ஓட்டல் நிர்வாகம் சார்பில் சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனில் விளக்க கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவிப்புக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் விளக்கம் அளித்தனர். இதனால், போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது,'' என்றார்.


மாதர் சங்கம் எதிர்ப்பு


திருப்பூர் மாவட்ட ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:'டிவின் பெல்ஸ்' ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில், பெண்களுக்கு இலவச மதுபானம் என்ற அறிவிப்பு பரவி வருகிறது. ஏற்கனவே, 'டாஸ்மாக்' மதுக்கடையால் பல குடும்பங்கள் சீரழியும் நிலையில், இது பெண்களையும் மது அருந்த வைக்கும். பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கும் வழி ஏற்படுத்தும். எனவே, இது போன்ற செயல்கள் தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில், அவர்கள் தெரிவித்துள்ளனர்.


கமிஷனரிடம் மேயர் புகார்


விவகாரம் குறித்து, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் அறிக்கை:கடந்த ஜூலையில், இந்த ஓட்டல் திறப்பு விழாவில் அந்த நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று கலந்து கொண்டேன். தற்போது அங்கு நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாளை (இன்று) நடக்கும் நிகழ்ச்சி குறித்த தகவல், சமூக வலை தளங்களில் வந்தவுடன், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன்.அரசுக்கும், தமிழக கலாசாரத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சி நடக்கக் கூடாது என்பதால், புகார் அளித்துள்ளேன். சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையற்ற கருத்துகளை பரப்பி வருகின்றனர். இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க கமிஷனரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X