தங்கை மாயம்: அண்ணன் புகார்

Added : செப் 17, 2022 | |
Advertisement
புதுச்சேரி : மனநலம் பாதித்த தங்கையை காணவில்லை என போலீசில் அண்ணன் புகார் அளித்துள்ளார்.புதுச்சேரி, சண்முகாபுரம், வி.பி.சிங் நகர், பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன், 41; இவரது தங்கை செல்வி, 37; மனநலம் பாதிக்கப்பட்ட இவர், ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 18 ஆண்டுகளாக தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போவதும், அடுத்த சில நாட்கள்



புதுச்சேரி : மனநலம் பாதித்த தங்கையை காணவில்லை என போலீசில் அண்ணன் புகார் அளித்துள்ளார்.புதுச்சேரி, சண்முகாபுரம், வி.பி.சிங் நகர், பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன், 41; இவரது தங்கை செல்வி, 37; மனநலம் பாதிக்கப்பட்ட இவர், ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 18 ஆண்டுகளாக தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போவதும், அடுத்த சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதும் வழக்கம்.இந்நிலையில், கடந்த 25ம் தேதி காலை 10:00 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சந்திரசேகரன் அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல் போன செல்வியை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X