இரும்பு கதவை துளையிட்டு நகைக்கடையில் கொள்ளை; திருக்கோவிலூரில் மர்ம நபர்கள் கைவரிசை

Added : செப் 17, 2022 | |
Advertisement
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் நகைக் கடையின் இரும்பு கதவை வெல்டிங் வைத்து உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் வடக்கு வீதியில் பாபுலால் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் உரிமையாளர் நித்தேஷ், 42; லோகேஷ், 35; ஆகியோர் கடையை பூட்டி
இரும்பு கதவை துளையிட்டு நகைக்கடையில் கொள்ளை;  திருக்கோவிலூரில் மர்ம நபர்கள் கைவரிசை



திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் நகைக் கடையின் இரும்பு கதவை வெல்டிங் வைத்து உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் வடக்கு வீதியில் பாபுலால் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் உரிமையாளர் நித்தேஷ், 42; லோகேஷ், 35; ஆகியோர் கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை 8:45 மணியளவில் லோகேஷ் மற்றும் கடை ஊழியர்கள் கடையைத் திறந்து உள்ளே சென்றபோது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.இதனால், மொட்டை மாடியில் இருக்கும் மின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றபோது, மாடியில் இருந்த இரும்பு சேப்டி கதவு வெல்டிங் மூலம் துளையிடப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடன், தரைத்தளத்திற்கு வந்து பார்த்தபோது, தங்க நகை பிரிவில் இருந்த 10க்கும் மேற்பட்ட டிரேவில் இருந்த 600 கிராம் (75 சவரன்) தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

மேலும், முதல் மாடியில் உள்ள வெள்ளி பிரிவில் கொலுசு, பாத்திரம் உட்பட 40 கிலோ அளவிலான வெள்ளிப் பொருட்களும், தரைத் தளத்தில் கல்லா பெட்டியில் இருந்த 1.20 லட்சம் ரூபாயும் கொள்ளை போனது தெரியவந்தது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மட்டும் 52 லட்சம் ரூபாய் அளவில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.தங்க நகைகளில் மூக்குத்தி, கம்மல் என சிறிய அளவிலான நகைகள் மட்டுமே கொள்ளை போயிருந்தது. தரைத்தளத்தில் இருந்த பாதுகாப்பு பெட்டக அறை ஷோகேஸ் போல் மூடப்பட்டிருந்ததால் அங்கிருந்த லாக்கர் கொள்ளையர்களுக்கு தெரியவில்லை.அதில் தான் கடையின் மொத்த நகையும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 17 கிலோ அளவிலான தங்க நகைகள் தப்பியது.

கள்ளக்குறிச்சி எஸ்.பி., பகலவன், டி.எஸ்.பி., பழனி, இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.மேலும், கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், கடைக்குள் 4 பேர் நுழையும் காட்சி பதிவாகியுள்ளது. அதன் பிறகு சி.சி.டி.வி., இணைப்பை துண்டித்துள்ளனர்.வழக்கமாக நகைக் கடைகளில் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் முகமூடி அணிந்திருப்பர். ஆனால், யாரும் முகமூடி அணியவில்லை.

நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் சி.சி.டி.வி., காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.தடய அறிவியல் துறை ஏ.டி.எஸ்.பி., சோமசுந்தரம் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், அசலாமுதீன், செல்வம், ராஜவேல் ஆகியோர் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.விழுப்புரத்திலிருந்து, மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது திருடு நடந்த இடத்திலிருந்து பஸ் நிலையம், வழியாகச் சென்று பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை ஓடி நின்றது.எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த நகரின் மையப் பகுதியில் அரங்கேற்றப்பட்டு இருக்கும் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X