துர்கா ஸ்டாலின் கோயில் கோயிலாக செல்கிறாரே ஹிந்துகள் குறித்து அவதுாறாக பேசிய ஆ.ராஜாவுக்கு செல்லுார் ராஜூ கேள்வி

Added : செப் 17, 2022 | |
Advertisement
மதுரை : ''ஹிந்துகள் விபச்சாரியின் பிள்ளைகள் என்று அவதுாறாக பேசிய தி.மு.க., எம்.பி., ஆ.ராஜாவே, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா கோயில் கோயிலாக செல்கிறாரே,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கேள்வி எழுப்பினார்.மின்கட்டண உயர்வை கண்டித்து மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே நகர் அ.தி.மு.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் செல்லுார் ராஜூ பேசியதாவது: தி.மு.க.,



மதுரை : ''ஹிந்துகள் விபச்சாரியின் பிள்ளைகள் என்று அவதுாறாக பேசிய தி.மு.க., எம்.பி., ஆ.ராஜாவே, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா கோயில் கோயிலாக செல்கிறாரே,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கேள்வி எழுப்பினார்.மின்கட்டண உயர்வை கண்டித்து மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே நகர் அ.தி.மு.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் செல்லுார் ராஜூ பேசியதாவது: தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் விலைவாசி உயர்ந்து வருகிறது. இனி நடந்தால் கூட வரி போடுவார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தி.மு.க., அரசு முடக்கியுள்ளது. சில திட்டங்கள் ஏனோ, தானோ என நடக்கிறது.ஸ்டாலின் 'பொம்மை' முதல்வராக உள்ளார்.நவராத்திரி கொலு பொம்மை போல் ஊர் ஊராக சென்று வருகிறார். உண்மையில் அவரை மருமகன் சபரீசன்தான் இயக்குகிறார். கட்சியையும், ஆட்சியையும் ஸ்டாலின் குடும்பம் தான் கவனிக்கிறது. இதில் கனிமொழிக்கு கூட இடமில்லை.

சினிமா துறையை உதயநிதி பார்த்துக்கொள்கிறார். தி.மு.க., ஆட்சியில் கலெக் சன், கரெப்ஷன்தான் மேலோங்கி இருக்கிறது.2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தி.மு.க., எம்.பி., ஆ.ராஜா, ஹிந்துக்களை விபச்சாரியின் பிள்ளைகள் என்று கூறியிருக்கிறார்.முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா கோயில் கோயிலாக செல்கிறாரே. ராஜாவை ஸ்டாலின் கண்டித்து, கட்சியில் இருந்து நீக்கியிருக்க வேண்டாமா. தி.மு.க., ஆட்சியில் எதுவானாலும் பேசலாம் என்பது போல்உள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில் இப்படி யாராவது பேசியிருக்க முடியுமா. இவ்வாறு அவர் பேசினார்.


ராஜா மீது போலீசில் புகார்

ஹிந்துகள் குறித்து அவதுாறாக பேசிய ஆ.ராஜாமீது தமிழகம் முழுவதும் பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. நேற்று மதுரை கரிமேடு ஸ்டேஷனில் பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், கீரைத்துறை ஸ்டேஷனில் அனுப்பானடி மண்டல தலைவர் கண்ணன் புகார் செய்தனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X