அரசு பள்ளியில் பயனற்று கிடக்கும் ஆர்.ஓ., இயந்திரம், இலவச சைக்கிள்| Dinamalar

அரசு பள்ளியில் பயனற்று கிடக்கும் ஆர்.ஓ., இயந்திரம், இலவச சைக்கிள்

Added : செப் 17, 2022 | |
கிருஷ்ணகிரி,-அரசு பள்ளியில் பயனற்ற நிலையில் ஆர்.ஓ., இயந்திரம், இலவச சைக்கிள்கள் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ளது, ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி. இதில், 550க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு ஒகேனக்கல் குடிநீர் இணைப்பு இல்லை. சவுட்டள்ளி பஞ்., தண்ணீர் இணைப்பு மட்டுமே


கிருஷ்ணகிரி,-அரசு பள்ளியில் பயனற்ற நிலையில் ஆர்.ஓ., இயந்திரம், இலவச சைக்கிள்கள் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ளது, ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி. இதில், 550க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு ஒகேனக்கல் குடிநீர் இணைப்பு இல்லை. சவுட்டள்ளி பஞ்., தண்ணீர் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில், ப்ளோரைடு அதிகமாக இருந்ததால், கடந்த, 2020ல், பள்ளிக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆர்.ஓ., இயந்திரம் போடப்பட்டது. ஆனால், இது ஓரிரு மாதங்கள் கூட சரியாக இயங்கவில்லை.

மேலும், அ.தி.மு.க., ஆட்சியில் வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட சைக்கிள்கள் வழங்கப்படாமல் பாழடைந்து வருகிறது. கடந்த வாரத்தில் பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்ட போதும் இந்த சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கவில்லை. இதுகுறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், 'அரசு பள்ளி மாணவர்களுக்காக வழங்கிய திட்டங்களை கூட பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் முறையாக பராமரிப்பதில்லை. கடந்த இரு ஆண்டு களாக, ஆர்.ஓ., இயந்திர பழுதை சரிசெய்யவில்லை. கிடப்பில் போடப்பட்டுள்ள சைக்கிள்களை எந்த கணக்கில் வைத்துள்ளார்கள் என்ற விபரம் தெரியவில்லை. வைரஸ் காய்ச்சல், ப்ளூ காய்ச்சல் பரவி வரும் வேலையில், ஆர்.ஓ., இயந்திரத்தையாவது சரிசெய்து மாணவர்களுக்கு முறையான குடிநீர் வழங்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X