சில வரி செய்திகள்: சேலம்

Added : செப் 17, 2022 | |
Advertisement
துாய்மை விழிப்புணர்வு ஆரம்பம்சேலம்: 'துாய்மை இந்தியா' திட்ட அடிப்படையில், செப்., 16 முதல், அக்., 2 வரை, துாய்மை விழிப்புணர்வு நிகழ்வுகளாக ரயில்வே துறை கடைப்பிடிக்கிறது. அதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்தில், நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கியது. கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் தலைமையில் அலுவலர்கள், பணியாளர்கள், துாய்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து

துாய்மை விழிப்புணர்வு ஆரம்பம்சேலம்: 'துாய்மை இந்தியா' திட்ட அடிப்படையில், செப்., 16 முதல், அக்., 2 வரை, துாய்மை விழிப்புணர்வு நிகழ்வுகளாக ரயில்வே துறை கடைப்பிடிக்கிறது. அதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்தில், நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கியது. கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் தலைமையில் அலுவலர்கள், பணியாளர்கள், துாய்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து ரயில்வே கோட்ட அலுவலத்தில் இருந்து, ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் வரை, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அப்போது, துாய்மை குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
நாளை அன்னாபிஷேகம்சேலம்: செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பாண்டுரங்கநாதர் கோவிலில், விஷ்னு துர்க்கைக்கு அன்னாபிஷேகம் நாளை நடக்க உள்ளது. அதையொட்டி மதியம், 2:00 மணிக்கு ஹோமம், பூர்ணாஹூதி, மாலை, 4:00 மணிக்கு அபிஷேகம், அன்னாபிஷேகம், 5:00 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், 5:30 மணிக்கு மகா தீபாராதனை நடக்க உள்ளது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

வரைதொழில் அலுவலர் கூட்டம்சேலம்: தமிழக வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரைதொழில் அலுவலர் சங்க மாநில கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மாநில செயலர் வரதராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். அதில் குடும்ப நலன் சார்ந்த நிகழ்வுகளை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் செல்வராஜ், சேலம் மண்டல பொறுப்பளர் டேவிட் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்ஆத்துார்: நரசிங்கபுரத்தில், நீரோடை ஆக்கிரமிப்பு குறித்து நேற்று, ஆத்துார் தாசில்தார் மாணிக்கம் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, ஆக்கிரமிப்பு செய்து பாதை, மரவள்ளி பயிர் சாகுபடி செய்திருந்தது தெரிந்தது. இதில், 40 சென்டில் இருந்த ஆக்கிரமிப்பு களை, 'பொக்லைன்' மூலம் வருவாய்த்துறையினர் அகற்றி மீட்டனர்.

500 பேர் தீ மிதித்து நேர்த்திக்கடன்ஆத்துார்: மல்லியகரை, திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த, 9ல், பெண் அழைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. நேற்று காலை, 11:00 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. திரவுபதி அம்மன் உள்ளிட்ட சுவாமிகள், ஆறு தேர்களில் திருவீதி உலாவாக கொண்டு சென்றனர். மதியம், அர்ஜூனன் கோட்டை இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, தீ மிதி விழா நடந்தது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மல்லியக்கரை, ஆத்துார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வழிபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X