இன்று வீடு தேடி வந்து ஆதார் எண் இணைப்பு| Dinamalar

இன்று வீடு தேடி வந்து 'ஆதார்' எண் இணைப்பு

Added : செப் 17, 2022 | |
சேலம்-சேலம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை:வாக்காளர் அடையாள அட்டையுடன், 'ஆதார்' எண்ணை இணைக்கும் பணி, கடந்த ஆக., 1ல் தொடங்கி நடந்து வருகிறது. தன்னார்வ அடிப்படையில் வாக்காளரிடமிருந்து, ஆதார் விபரம் சேகரித்து, வாக்காளர் பட்டியலில் உள்ள விபரத்துடன் இணைக்கும் முகாம், சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில், செப்., 17ல்(இன்று) நடக்கிறது. அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள்,

சேலம்-சேலம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை:வாக்காளர் அடையாள அட்டையுடன், 'ஆதார்' எண்ணை இணைக்கும் பணி, கடந்த ஆக., 1ல் தொடங்கி நடந்து வருகிறது. தன்னார்வ அடிப்படையில் வாக்காளரிடமிருந்து, ஆதார் விபரம் சேகரித்து, வாக்காளர் பட்டியலில் உள்ள விபரத்துடன் இணைக்கும் முகாம், சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில், செப்., 17ல்(இன்று) நடக்கிறது. அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் வீடுதோறும் சென்று வாக்காளரிடம், ஆதார் விபரம் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இந்த வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்தி, ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் '6பி'யை பூர்த்தி செய்து வழங்கலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X