சின்ன சின்ன செய்திகள்: கரூர்

Added : செப் 17, 2022 | |
Advertisement
ஆபத்தை ஏற்படுத்தும் மினி வேன்கள்கரூர்-கரூர் நகர பகுதியில் அதிகளவில், சரக்குகளை ஏற்றி செல்லும் மினி வேன்கள் ஓடுகின்றன. ஆனால், வேன்களில் மரம், கண்ணாடி, இரும்பு கம்பிகள் வாகனத்தின் பின் பகுதியில் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் வகையில் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதை எச்சரிக்கை செய்யும் வகையில்

ஆபத்தை ஏற்படுத்தும் மினி வேன்கள்கரூர்-கரூர் நகர பகுதியில் அதிகளவில், சரக்குகளை ஏற்றி செல்லும் மினி வேன்கள் ஓடுகின்றன. ஆனால், வேன்களில் மரம், கண்ணாடி, இரும்பு கம்பிகள் வாகனத்தின் பின் பகுதியில் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் வகையில் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதை எச்சரிக்கை செய்யும் வகையில் சிவப்பு கொடி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டு செல்வது இல்லை. இதனால், வேன்களுக்கு பின்னால் வரும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்குகின்றனர். இதுபோன்று விபத்தை ஏற்படுத்துபவர்கள் மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருவேல மரங்களை அகற்ற வேண்டுகோள்கரூர்-கரூர் அருகே கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகுளத்துப்பாளையத்தில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், அந்த பகுதியில் செல்லும் சாக்கடை கால்வாயில், அதிக அளவில் கருவேல மரங்கள், செடிகள் முளைத்துள்ளன. இதனால், மழைக்காலங்களில் மழைநீர், கழிவுநீர் செல்லாமல் பல இடங்களில் தேங்கிவிடுகிறது. மேலும், கருவேல மரங்கள் முளைத்துள்ள கால்வாய் பகுதியில் இருந்து, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
சின்டெக்ஸ் தொட்டி பழுதால் கடும் அவதிகரூர்-கரூரை அடுத்த ராயனுாரில் சேதமடைந்த குடிநீர் தொட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ராயனுாரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர். தற்போது, இந்த தொட்டியில் அதிக அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், போர்வெல் குழாயும் பழுதடைந்துள்ளது. எனவே, போர்வெல் குழாயை சீரமைத்து, புதிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X