கொடிவேரி குடிநீர் திட்டத்தில் விடுபட்ட பஞ்.,கள் இணைக்க கோரி முன்னாள் அமைச்சர் முறையீடு

Added : செப் 17, 2022 | |
Advertisement
ஈரோடு-கொடிவேரி குடிநீர் திட்டத்தில் விடுபட்ட பஞ்.,களை இணைக்க கோரி, ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மனு வழங்கினார்.அவரது மனுவில் கூறியதாவது:பெருந்துறை தொகுதிக்கான கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம், 234 கோடி ரூபாயில் மேற்கொண்டு, 2 மாதம் முன் முதல்வர் துவக்கி வைத்தார். 3 யூனியன், 8 டவுன் பஞ்.,கள் பயனடையும்படி வடிவமைக்கப்பட்டது.


ஈரோடு-கொடிவேரி குடிநீர் திட்டத்தில் விடுபட்ட பஞ்.,களை இணைக்க கோரி, ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மனு வழங்கினார்.அவரது மனுவில் கூறியதாவது:பெருந்துறை தொகுதிக்கான கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம், 234 கோடி ரூபாயில் மேற்கொண்டு, 2 மாதம் முன் முதல்வர் துவக்கி வைத்தார். 3 யூனியன், 8 டவுன் பஞ்.,கள் பயனடையும்படி வடிவமைக்கப்பட்டது. தற்போது, சென்னிமலை யூனியன் ஈங்கூர், வாய்ப்பாடி, வரப்பாளையம், கூத்தம்பாளையம், சிறுகளஞ்சி, பனியம்பள்ளி ஆகிய, பஞ்.,கள் விடுபட்டுள்ளன. அவற்றை இணைத்து குடிநீர் வழங்க வேண்டும். இப்பகுதியில் சிப்காட் ஆலை கழிவால், நிலத்தடி நீர் பாதித்து, கால்நடைகள் கூட குடிக்க முடியவில்லை. விடுபட்ட பஞ்.,களுக்கு குடிநீர் இணைத்து வழங்க வேண்டும்.அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் சென்னிமலை பகுதியில், 60க்கும் மேற்பட்ட குளங்கள் இணைக்காமல் உள்ளதை இணைக்க வேண்டும்.பெருந்துறை தினசரி மார்க்கெட் வளாகத்தில் இரு தளமாக காய்கறி மார்க்கெட்டுக்கு கடை அமைத்தால், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள், சுமைப்பணியாளர்கள் சென்று வருவது சிரமம். எனவே தரைத்தளத்தில் மட்டும் கடைகள் அமைக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X