ராணிக்கு அஞ்சலி செலுத்த சீன பிரதிநிதிகளுக்கு தடை

Updated : செப் 17, 2022 | Added : செப் 17, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
லண்டன்-லண்டன், 'வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில்' வைக்கப்பட்டுள்ள ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன அரசு பிரதிநிதிகளுக்கு பிரிட்டன் அனுமதி மறுத்துள்ளது. சமீபத்தில் மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு

லண்டன்-லண்டன், 'வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில்' வைக்கப்பட்டுள்ள ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன அரசு பிரதிநிதிகளுக்கு பிரிட்டன் அனுமதி மறுத்துள்ளது.



latest tamil news



சமீபத்தில் மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு பிரதிநிதிகளும் நேரில் வந்து ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சீன அரசு சார்பில், அந்நாட்டு உயர் அதிகாரிகள் வந்து அஞ்சலி செலுத்துவதாக இருந்தது. அதற்கு பிரிட்டன் பார்லி.,யின் பொதுச்சபை சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல் அனுமதி மறுத்து உள்ளார்.

சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறலில் சீன பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவது குறித்து பிரிட்டனை சேர்ந்த எம்.பி.,க்கள் கடந்த ஆண்டு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பிரிட்டனை சேர்ந்த 5 எம்.பி.,க்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சீன பகுதிக்குள் நுழைய அந்நாடு தடை விதித்தது. இதையடுத்து, ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் சீன அரசு பிரதிநிதிகள் பார்லி., வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது என, எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.


latest tamil news




இதையடுத்து சீன பிரதிநிதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நாளை மறுநாள் நடக்கும் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்க சீன அதிபர் ஷீ ஜிங்பிங்குக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. அவர் சார்பில் துணை அதிபர் வாங் குயிஷான் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணியின் இறுதி சடங்கில் சீனா பங்கேற்க தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-202217:55:27 IST Report Abuse
பேசும் தமிழன் இறந்த ஒரு தலைவருக்கு அஞ்சலி செலுத்த வரும் ஆட்களை தடுப்பது. பெரிய அயோக்கிய தனம்.நீங்கள் கூட தான் இந்தியாவில் சொல்ல முடியாத அளவுக்கு கொடுமைகள் செய்தீர்கள். அதற்க்காக உங்களை என்ன செய்ய. உங்கள் அளவுக்கு அவர்கள் ஒன்றும் கொடுமை செய்யவில்லை. ஒரு நாட்டில் இருந்தால்... நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று தான் கூறுகிறார்கள்
Rate this:
Cancel
17-செப்-202216:20:56 IST Report Abuse
அப்புசாமி போன நூற்றாண்டு வரை ஏழை நாடுகளை ஆட்டையப் போட்டது இங்கிலாந்து. இப்போ அந்தத் தொழிலை சீனா செய்யுது. தொழில் முறையில் போட்டி வந்திடுச்சு. அதான்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
17-செப்-202215:09:41 IST Report Abuse
Vena Suna அருமை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X