கண்மாய்க்குள் அதிக ஆழத்தில் மண் அள்ளும் கொடுமை| Dinamalar

கண்மாய்க்குள் அதிக ஆழத்தில் மண் அள்ளும் கொடுமை

Added : செப் 17, 2022 | |
ராஜபாளையம் : சேத்துார் அடுத்த தேவதானம் பெரியகுளம் கண்மாயில் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் விதிகளை மீறி தொடர்ந்து அதிக ஆழத்தில் மண் அள்ளுவதால் விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர்.தேவதானம் பெரிய கோயில் முன்பு பொதுப் பணித்துறைக்கு பாத்தியப்பட்ட பெரியகுளம் கண்மாயில் கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் பெயரில் சுற்றுப்பகுதி செங்கல் சூளைகளுக்கு மண் கொண்டு செல்லப்படுகிறது.இது
கண்மாய்க்குள் அதிக ஆழத்தில் மண் அள்ளும் கொடுமை



ராஜபாளையம் : சேத்துார் அடுத்த தேவதானம் பெரியகுளம் கண்மாயில் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் விதிகளை மீறி தொடர்ந்து அதிக ஆழத்தில் மண் அள்ளுவதால் விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர்.தேவதானம் பெரிய கோயில் முன்பு பொதுப் பணித்துறைக்கு பாத்தியப்பட்ட பெரியகுளம் கண்மாயில் கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் பெயரில் சுற்றுப்பகுதி செங்கல் சூளைகளுக்கு மண் கொண்டு செல்லப்படுகிறது.இது குறித்து கடந்த ஐந்து நாட்களுக்கு முன் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.



அதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் தற்போது வரை எந்த மாற்றம் இன்றி இரவு பகலாக நுாற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் மூலம் கண்மாய் மண் அள்ளப்பட்டு வருகிறது.தற்போது வரை கண்மாய் நடுவே, உபரி நீர் வெளியேறும் கழுங்கு கரை அருகே சிறிய குளங்கள் போல் 20 அடி ஆழத்திற்கு மண்ணை தோண்டி எடுத்துள்ளனர்.நேற்று மதியம் விவசாயிகள் ஒன்று கூடி கடும் எதிர்ப்பை தெரிவித்தும் மணல் அள்ளுவது நின்ற பாடில்லை.இதை கண்காணிக்க பொதுப்பணித்துறையினர் இருக்க வேண்டிய நிலையில் 20க்கும் அதிகமானோர் கண்மாய் அருகே காவல் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை மிரட்டுகின்றனர்.



இவர்களின் விதி மீறலால் தற்போது நாற்று நடும் பருவம் வந்துள்ள நிலையில் மழை வந்து கண்மாய்களில் நீர் தேங்கினாலும் மடையை தாண்டி விவசாய பகுதிக்கு வெளியேறாமல் கண்மாயிலேயே குளங்கள் போல தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளித்தும் இதே நிலை தொடர்வதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X