சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

Added : செப் 17, 2022 | |
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மாநில கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் சார்பில், பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா சான்றிதழ் வழங்கினார்.இந்திய அரசு ஜவுளி அமைச்சகம் கைவினை அபிவிருத்தி ஆணையர் அலுவலகம், டில்லி கைவினை தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தின் கீழ், அணிகலன் கைவினைப் பொருட்கள் பயிற்சி அளிக்க, புதுச்சேரி மாநில கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி



புதுச்சேரி : புதுச்சேரி மாநில கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் சார்பில், பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா சான்றிதழ் வழங்கினார்.இந்திய அரசு ஜவுளி அமைச்சகம் கைவினை அபிவிருத்தி ஆணையர் அலுவலகம், டில்லி கைவினை தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தின் கீழ், அணிகலன் கைவினைப் பொருட்கள் பயிற்சி அளிக்க, புதுச்சேரி மாநில கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 20 அணிகலன் கைவினை கலைஞர்கள் தங்களின் இரண்டு மாத காலம் பயிற்சியை நிறைவு செய்தனர். பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, மாநில கூட்டுறவு தலைமை அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு போக்குவரத்து அமைச்சர் சந்திரபிரியங்கா கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X