பாப்ஸ்கோ ஊழியர்கள் நுாதன போராட்டம்| Dinamalar

பாப்ஸ்கோ ஊழியர்கள் நுாதன போராட்டம்

Added : செப் 17, 2022 | |
புதுச்சேரி : சம்பள நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, சங்கு ஊதி அரசை எழுப்பும் போராட்டத்தை பாப்ஸ்கோ ஊழியர்கள் நடத்தினர்.பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்களுக்கு 55 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், கடந்தாண்டு தீபாவளி பஜார் மானியமாக 62 லட்சம் ரூபாயை பாப்ஸ்கோவிற்கு அரசு வழங்க வேண்டும், பாப்ஸ்கோ மூலமாக நடத்தப்படும் 47 ரேஷன் கடைகளுக்கு 6 ஆண்டுகள்



புதுச்சேரி : சம்பள நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, சங்கு ஊதி அரசை எழுப்பும் போராட்டத்தை பாப்ஸ்கோ ஊழியர்கள் நடத்தினர்.பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்களுக்கு 55 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், கடந்தாண்டு தீபாவளி பஜார் மானியமாக 62 லட்சம் ரூபாயை பாப்ஸ்கோவிற்கு அரசு வழங்க வேண்டும், பாப்ஸ்கோ மூலமாக நடத்தப்படும்



47 ரேஷன் கடைகளுக்கு 6 ஆண்டுகள் வாடகை தொகை நிலுவை 1.30 கோடி ரூபாயை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மூன்றாம் நாளான நேற்று, அரசை சங்கு ஊதி எழுப்பும் போராட்டத்தை நடத்தினர்.



சட்டசபை அருகே நடந்த இந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். பாப்ஸ்கோ ஊழியர் நல சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் மோகன் மற்றும் குணா, கோவர்த்தனன், பிரபு, ஏழுமலை, அமுதா, சரஸ்வதி, அமுதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஏ.ஐ.டி.யூ.சி., மாநில செயல் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X