கிரைம் செய்திகள்...

Added : செப் 17, 2022 | |
Advertisement
நகராட்சி ஊழியர் மீது வழக்குஉளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் விஜய், 25;. தற்காலிக துப்புரவு பணியாளர். இவர், கடந்த 15ம் தேதி காலை நகராட்சி அலுவலகத்தில் இருந்தபோது, அலுவலக ஊழியர் சரவணன், விஜய்யிடம், மார்பில் பச்சை குத்திக் கொண்டு ஜாதியை வெளிப்படுத்தும் விதமாக வேலைக்கு வரக்கூடாது கூறினார். இது குறித்து விஜய் கொடுத்த புகாரின்பேரில்நகராட்சி ஊழியர் மீது வழக்குஉளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் விஜய், 25;. தற்காலிக துப்புரவு பணியாளர். இவர், கடந்த 15ம் தேதி காலை நகராட்சி அலுவலகத்தில் இருந்தபோது, அலுவலக ஊழியர் சரவணன், விஜய்யிடம், மார்பில் பச்சை குத்திக் கொண்டு ஜாதியை வெளிப்படுத்தும் விதமாக வேலைக்கு வரக்கூடாது கூறினார். இது குறித்து விஜய் கொடுத்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மது பாட்டில் விற்ற பெண் கைது


உளுந்துார்பேட்டை: வண்டிப்பாளையம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி தமயந்தி, 45; என்பவரை திருநாவலுார் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


கடனைக் கேட்டு தாக்கியவர் மீது வழக்கு


உளுந்துார்பேட்டை: எறையூரைச் சேர்ந்தவர் மரியசாமி, 53; இவரது மகள் ஆசியஜோசின் கணவர் ரியா மைக்கேல், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க அதே பகுதியில் உள்ள செல்வராஜ் மகன் பாஸ்கர், 25; என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். அதை ரியா மைக்கேல் திருப்பித் தரவில்லை. கடந்த 12ம் தேதி சரவணன், மரியசாமியிடம் பணத்தை கேட்டு அவரை திட்டி, தாக்கினார். மரியசாமி கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் பாஸ்கர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


பெண்ணை மிரட்டிய 5 பேர் மீது வழக்கு


உளுந்துார்பேட்டை: குஞ்சரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி மலர், 37; அதே பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். இருவரது குடும்பத்திற்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 12ம் தேதி மலரிடம், அருணாசலம் தரப்பினர் தகராறு செய்து திட்டி, தாக்கினர். மலர் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் அருணாச்சலம், முருகவேல், ரத்தினாம்பாள், ஆனந்தி, தங்கவேல் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.


பெண் மானபங்கம்: போலீஸ் விசாரணை


உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையைச் சேர்ந்தவர் திலக் பாட்ஷா மனைவி சாய்நாத், 45; இவரது மகள் ஹசினாவை அவரது கணவர் கொடுமைப்படுத்துவதாக உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்திருந்தார். விசாரணைகாக சாய்நாத், ஹசினா போலீஸ் நிலையம் சென்றபோது, வண்ணகப்பாடி அல்லாபாட்ஷா மகன்கள் ராம்ஜானி, 35; அமாலுல்லா, 25; ஆகியோர் இருவரையும் திட்டி மானபங்கப்படுத்தினர். சாய்நாத் கொடுத்த புகாரின் பேரில் ராம்ஜானி, அமாலுல்லா ஆகியோர் மீது உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


சாராய ஊறல் அழிப்பு


சங்கராபுரம்: இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் விரியூர் கிராமத்தில் காப்பு காட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு, சாராயம் காய்ச்சுவதற்கு சாராய ஊறல் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 300 லிட்டர் சாரய ஊரல்கள் மற்றும் 50 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தடுப்புக் காவலில் ஒருவர் கைது


கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அடுத்த மாயம்பாடிச் சேர்ந்தவர் விஜய் (எ) செல்வகுமார், 39; இவர் மீது சாராய வழக்குகள் உள்ளது. இவரது நடவடிக்கையை தடுத்து நிறுத்த தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., பகலவன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஷ்ரவன்குமார், சாராய வியாபாரி செல்வகுமாரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் செல்வகுமார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


மகள் மாயம்: தந்தை புகார்


திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரைச் சேர்ந்தவர் சங்கரன், 58; இவரது 21 வயது மகள் நேற்று முன்தினம் மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சங்கரன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.


மருத்துவமனையில் ரகளை செய்தவர் கைது


திருக்கோவிலுார்: கனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் தங்கதுரை, 31; நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்குச் சென்று பணியில் இருந்த டாக்டர் மற்றும் செவிலியர்களுடன் தகராறு செய்து, கதவில் இருந்த கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டார். இது குறித்து மருத்துவமனை அதிகாரி டாக்டர் அன்புமணி கொடுத்த புகாரின் பேரில் தங்கதுரை மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


ரயில் மோதி வாலிபர் பலி


விழுப்புரம்: அலமேலுபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் பரத், 22; மினி லோடு வேன் டிரைவர். இவர், நேற்று அதிகாலை 5:30 மணியளவில் வண்டிமேட்டில் சென்றபோது விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் பரத் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே பரத் இறந்தார். விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


மரத்தில் இருந்து விழுந்தவர் பலி


செஞ்சி: திண்டிவனத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகன் ஸ்டீபன்ராஜ் 32; பட்டதாரி. புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி மனைவி விவகாரத்து பெற்று சென்றதால் மன அழுத்தம் ஏற்பட்டு மனநோயாளியாக மாறினார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 8ம் தேதி விழுப்புரம் அருகே உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு காப்பகத்தில் இருந்து வெளியேற, மாடி மீது ஏறி மரத்தின் வழியாக கீழே இறங்கியபோது தவறி கீழே விழுந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று காலை இறந்தார்.


பங்க் ஊழியர்கள் தாக்கு


கள்ளக்குறிச்சி: பெருமங்கலத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் குமரேசன், 30; புக்கிரவாரி புதுாரில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிகிறார். கடந்த 14ம் தேதி இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் பெட்ரோல் போட வந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் அவர், குமரேசன், பெட்ரோல் பங்க் மேலாளர் சரோஜினி ஆகியோரை தாக்கினார். புகாரின் பேரில் தினேஷ் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


மருமகன் தாக்கு: மாமனார் மீது வழக்கு


கள்ளக்குறிச்சி: எரவூரைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 37; இவரது மனைவி முத்துலட்சுமி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். முத்துலட்சுமி தந்தை கோவிந்தன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த இருவர், மருமகன் நாராயணசாமி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகப்பட்டு கடந்த 13ம் தேதி தாக்கினர். நாராயணசாமி கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தன், பூமாலை, பச்சமுத்து ஆகிய 3 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.


முதியவரைத் தாக்கியவர் மீது வழக்கு


கள்ளக்குறிச்சி: கருந்தலாக்குறிச்சியைச் சேர்ந்தவர் செல்லமுத்து, 72; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு இருவருக்குமிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை செல்வராசு, செல்லமுத்துவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் செல்வராசு மீது கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


மின்வாரிய ஊழியர் தற்கொலை


கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த அனுமனந்தலைச் சேர்ந்தவர் குப்புசாமி, 52; சின்னசேலம் மின்வாரிய ஊழியர். கடந்த 6 மாதங்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில், குப்புசாமியின் வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி கால் வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த அவர் கடந்த பூச்சி மருந்து குடித்தார். உடன், சென்னை, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று நேற்று இறந்தார். கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X