மதுரை டூ கடலுார் சிறைக்கு சவுக்கு சங்கர் மாற்றம் ஏன்?

Added : செப் 17, 2022 | கருத்துகள் (35) | |
Advertisement
மதுரை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு மாதம் சிறை தண்டனை பெற்று, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட 'யு டியூபர்' சவுக்கு சங்கர், சில மணி நேரத்திலேயே, கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். மதுரை சிறையில், 100 கோடி ரூபாய் ஊழல் புகார் குறித்து, இவர் ஏற்கனவே வீடியோ வெளியிட்டதால், இடம் மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.நீதித்துறை குறித்து, யு டியூப் சேனலில் அவதுாறான கருத்துகளை கூறியதாக,
Savukku Shankar, Madurai Jail, Cuddalore jail

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு மாதம் சிறை தண்டனை பெற்று, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட 'யு டியூபர்' சவுக்கு சங்கர், சில மணி நேரத்திலேயே, கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். மதுரை சிறையில், 100 கோடி ரூபாய் ஊழல் புகார் குறித்து, இவர் ஏற்கனவே வீடியோ வெளியிட்டதால், இடம் மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

நீதித்துறை குறித்து, யு டியூப் சேனலில் அவதுாறான கருத்துகளை கூறியதாக, சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் மதுரை கிளை, தானாக முன்வந்து அவதுாறு வழக்கு தொடர்ந்தது. பல கட்ட விசாரணைக்கு பிறகு, நேற்று முன்தினம், அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்தது. தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்கு பின், இரவு 9:45 மணிக்கு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை டி.ஜி.பி., சுனில்குமார் சிங் உத்தரவுப்படி, இரவு 11:00 மணிக்கு, கடலுார் சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார்.


latest tamil news
இடமாற்றம் ஏன்?


மதுரை சிறையில், மருத்துவ பேண்டேஜ் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடக்கின்றன. இதில், 100 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப் பட்டது. இதுகுறித்து, யு டியூப்பில் சவுக்கு சங்கர், 'அலசி' ஆராய்ந்து கருத்து கூறியிருந்தார். இச்சூழலில், மதுரை சிறையில் அவர் இருந்தால், அதுகுறித்து மேலும் விசாரிப்பார். அது தங்கள் துறைக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், அவரை கடலுாருக்கு இடம் மாற்றியுள்ளனர் என தெரியவந்தது.

சவுக்கு சங்கருக்கு எதிராக தீர்ப்பு வந்தவுடனேயே, கடலுார் சிறைக்கு இடமாற்றம் செய்ய வேண்டிய வேலையை, சிறை நிர்வாகம் செய்ய ஆரம்பித்து விட்டது.மதுரை சிறையில் கைதிகள் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையான 1,200க்கு பதில், 1,850 பேர் உள்ளனர். இதனால், உள்ளே பல்வேறு நெருக்கடிகளை சிறை நிர்வாகம் சந்தித்து வருகிறது. இதையும் சவுக்கு சங்கர் 'தோண்டுவார்' என்பதும், இட மாற்றத்திற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathanban Vs - tirupur,இந்தியா
17-செப்-202218:43:47 IST Report Abuse
Bharathanban Vs அவருக்கு உடனடியாக தண்டனை தரவில்லை. தவறான செய்தியை படிக்காதீர்கள்... அவர் தனது தரப்பை வாதிட அனைத்து வாய்ப்புகளும் தரப்பட்டது. தீர்ப்பு விபரம் கோர்ட் இணைய தளத்தில் உள்ளது. படிக்கவும்..
Rate this:
John Miller - Hamilton,பெர்முடா
18-செப்-202202:23:17 IST Report Abuse
John Millerநீ நவீன கோயாபல்ஸா?...
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
17-செப்-202216:47:55 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy இது போல மற்றவர்களுக்கு சட்டமில்லை. கோர்ட்டுக்கு போனால் நடப்பது வேறு என்கிற பயத்தை உருவாக்குகிற இடத்தில இருந்தால் கோர்ட் எதுவும் செய்யாது போல் நினைக்கலாமா ?
Rate this:
Cancel
17-செப்-202216:23:59 IST Report Abuse
Tamilselvan,kangeyam638701 பிரதமர் மோடியின் தாயாரையும் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரையும் மிக மிகக் கேவலமாக விமர்சித்தவன் இந்த சவுக்கு பயல்.அப்படிப் பட்டவனுக்கு ஆறு மாத சிறை தண்டனை பத்தாது. குறைந்தது ஒரு வருட கடுங்காவல் சிறை தண்டைனையாவது கொடுத்திருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X