நீரிழிவு மாத்திரை ரூ.60: மத்திய அரசு அறிமுகம்

Added : செப் 17, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
புதுடில்லி : நீரிழிவுக்கான மலிவு விலை மாத்திரையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நீரிழிவு குறைபாடு கொண்டவர்களுக்கு 'சிட்டாகிளிப்டின்' 50 மில்லி கிராம் கொண்ட 10 மாத்திரை 60 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாத்திரை 100 மி.கி., 10 மாத்திரை 100 ரூபாய்க்கு கிடைக்கும். இதேபோல்
Govt, launches, diabetes drug, Sitagliptin, rs60

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

புதுடில்லி : நீரிழிவுக்கான மலிவு விலை மாத்திரையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நீரிழிவு குறைபாடு கொண்டவர்களுக்கு 'சிட்டாகிளிப்டின்' 50 மில்லி கிராம் கொண்ட 10 மாத்திரை 60 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாத்திரை 100 மி.கி., 10 மாத்திரை 100 ரூபாய்க்கு கிடைக்கும்.



இதேபோல் சிட்டாகிளிப்டின் மற்றும் மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைட் கலந்த 50 மி.கி., மற்றும் 500 மி.கி., 10 மாத்திரை 65 ரூபாய்க்கும், 1000 மி.கி., கொண்ட 10 மாத்திரை 70 ரூபாய்க்கும் விற்கப்படும்.


latest tamil news


நீரிழிவு குறைபாடு உடையோர் தற்போது, 162 முதல் 258 ரூபாய் வரை செலவு செய்து 10 மாத்திரைகள் வாங்குகின்றனர்.இந்த மலிவு விலை மாத்திரைகள், பிரதமர் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும்.



நாடு முழுதும் 8,700 இடங்களில் செயல்படும் இந்த மருந்தகங்களில், மலிவு விலையில் 1,600க்கும் மேற்பட்ட தரமான மருந்துகள், 250 மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு, ஒரு சானிட்டரி நாப்கின் ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

velan - california,யூ.எஸ்.ஏ
17-செப்-202216:56:59 IST Report Abuse
velan அரசு சற்று வித்தியாசத்துடன் இதை அணுக வேண்டும் . வியாதி வருவதற்கு முன் செய்யவேண்டியவைகளை மத்திய சுகாதார துறை செய்ய வேண்டும் . இவை பெரும்பாலும் இனியனாவை ஆட்டி படைக்கிறது . இதற்கு முழு முதற் காரணம் நமது உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் மனம் . கார்போஹட்ரேட்டை குறைத்து புரோட்டீன் மற்றும் வைட்டமின் உள்ள உணவுகளை அதிகரிக்கும் வைகளை ஆராய வேண்டும் . மேலும் உடற்பயிற்சியை ஊக்கு விக்க வேண்டும் . இது தனி மனித கடமை என்று தவிர்க்காமல் எப்படி இதை சரி செய்ய வேண்டும் என அரசு முயற்சி செய்ய வேண்டும் .குழந்தை முதல் ஆரம்பிக்க வேண்டும் . வருவதற்கு முன் சரி செய்வதே சரியாக இருக்க முடியும்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
17-செப்-202214:33:16 IST Report Abuse
Vena Suna விலை கம்மியாக இருந்தாலும் தரம் ,சில மாத்திரைகள்,அவ்வளவு நன்றாக இல்லை. பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. என் அனுபவம்.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202213:37:31 IST Report Abuse
venugopal s நீரிழிவு மாத்திரைகள் ஏற்கனவே மார்க்கெட்டில் இதைவிட மலிவான விலையில் கிடைக்கிறது.நான் உபயோகிக்கும் கிளைகோமெட் 500மி.கி. பத்து மாத்திரைகள் அடங்கிய ஒரு ஸ்டிரிப் வெறும் 16.80 ரூபாய்க்கு எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்கிறது.இது பாஜகவின் மற்றும் மோடியின் வெறும் விளம்பர ஸ்டண்ட், அவ்வளவுதான்!
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
17-செப்-202213:46:46 IST Report Abuse
வாய்மையே வெல்லும்இது மாதிரி எத்தனை எத்தனையோ மருந்துகள் வாங்கி பயனடைந்து உள்ளோம். உனக்கு வயித்தெரிச்சல் இப்படி தான் பேசுவ...
Rate this:
17-செப்-202215:19:19 IST Report Abuse
ஆரூர் ரங்மருந்துகள் பற்றி ஒண்ணுமே தெரியாம இப்படி ஒரு பதிவா?. எல்லா நீரிழிவு மருந்துகளும் ஒரே கெமிக்கல் அல்ல .🤔 மருந்து நவீன வகை. அதற்கேற்ற விலை...
Rate this:
Pandi Muni - Johur,மலேஷியா
17-செப்-202217:03:00 IST Report Abuse
Pandi Muniவேணுகோபாலா கிளைகோமெட் மாத்திரையை சாப்பிட்டுக்கிட்டே......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X