இடையூறு வாகனங்களுக்கு அபராதம்| Dinamalar

இடையூறு வாகனங்களுக்கு அபராதம்

Added : செப் 17, 2022 | |
சிவகாசி : சிவகாசியில் போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் நிறுத்தி சிமெண்ட் மூடைகள் இறக்கிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.சிவகாசி கட்டளைப்பட்டி ரோட்டில் சிமென்ட் மூடைகளை ஏற்றி வந்த லாரிகள் நடமாடும் குடோனாக மாறி அங்கிருந்தபடியே சிமென்ட் மூடைகளை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதோடு, சிமென்ட் துாசியால் வாகன



சிவகாசி : சிவகாசியில் போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் நிறுத்தி சிமெண்ட் மூடைகள் இறக்கிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.சிவகாசி கட்டளைப்பட்டி ரோட்டில் சிமென்ட் மூடைகளை ஏற்றி வந்த லாரிகள் நடமாடும் குடோனாக மாறி அங்கிருந்தபடியே சிமென்ட் மூடைகளை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதோடு, சிமென்ட் துாசியால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.



ஆய்வாளர் பாண்டியராஜன், துாய்மை இந்தியா திட்ட பரப்பரையாளர்கள், வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, முதல் முறை என்பதால் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் இதே போல் நடந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்படும், என்றார்.அண்ணாதுரை காய்கறி மார்க்கெட் அருகே ரோட்டில் குப்பைகளை கொட்டிய அப்பகுதியிலுள்ள கடைக்கு மாநகராட்சி ஊழியர்கள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X