கல்வியில் திண்டுக்கல் முதல் இடத்தை பிடிக்கும்

Added : செப் 17, 2022 | |
Advertisement
''பொது தேர்வில் மாநிலத்தில் திண்டுக்கல் முதல் இடத்தை பிடிக்கும் வகையில்,மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுவதாக,'' மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன் தெரிவித்தார்.மாணவர்களுக்கான கல்வித்திறன் மேம்படுத்தப்படுகிறதா 1லிருந்து 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாசிப்புத்திறன்,கற்கும் ஆர்வம் குறித்து வகுப்புகள் நடக்கிறது. அதை ஊக்கப்படுத்தி
கல்வியில் திண்டுக்கல் முதல் இடத்தை பிடிக்கும்



''பொது தேர்வில் மாநிலத்தில் திண்டுக்கல் முதல் இடத்தை பிடிக்கும் வகையில்,மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுவதாக,'' மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன் தெரிவித்தார்.

மாணவர்களுக்கான கல்வித்திறன் மேம்படுத்தப்படுகிறதா 1லிருந்து 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாசிப்புத்திறன்,கற்கும் ஆர்வம் குறித்து வகுப்புகள் நடக்கிறது. அதை ஊக்கப்படுத்தி மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை துாண்டுகிறோம்.அதையும் கண்காணிக்கிறோம்.கட்டாயம் கல்வித்திறன் குழந்தைகளை மேம்படுத்தும்.கல்வியில் முதல் மாவட்டமாக மாற்றுவதற்கான வழிமுறைகள்... பள்ளிகளில் தினமும் காலை,மாலை நேரங்களில் மாணவர்களை கூடுதல் நேரம் படிக்க வைக்க சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.அப்போது மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்க்கப்படுகிறது.அதுவும் விருப்பமுடன்மாணவர்களை படிக்க வைக்கும் வகையில் அந்த சிறப்பு வகுப்புகள் செயல்படுகிறது.

இதனால் மற்ற மாவட்டங்களை போல் திண்டுக்கல்லும் கல்வியில் முதல் இடத்தை பிடிக்கும்.2021-22 10,11,12 வகுப்பு தேர்வில் 90 சதவீதம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாதிண்டுக்கல்லில் 954 துவக்கபள்ளிகள்,200 நடுநிலைப்பள்ளிகள்,82 உயர்நிலைப்பள்ளிகள், 89 மேல்நிலைப்பள்ளிகள் அரசு பள்ளிகளாக செயல்படுகிறது.இவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் உள்ளனர்.சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் அதுவும் பூர்த்தி செய்யப்படும்.

மாணவர்களுக்கு விளையாட்டிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா விளையாட்டுக்கு அதிகமாக முக்கியத்துவம் வழங்கப்பட்டு,மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகிறது.வெல்பவர்களுக்கு பரிசுகளும் வழங்குகிறோம்.எத்தனை பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது...

கொடைக்கானலில் 34 , திண்டுக்கல்லில் 14 பள்ளிகளில் இத்திட்டம் செயல்பட துவங்கியுள்ளது.அதை முறையாக கண்காணிக்கப்படும். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடுகள் என்ன... வீடுதோறும் சென்று படிக்காத மாணவர்களை கண்டறிந்து அவர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்து படிக்க வைக்கிறோம். விழிப்புணர்வு இல்லாத பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். வறுமையால் படிப்பை இழந்தவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறோம்,என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X