அரசாணை இருந்தும் வராத தண்ணீர்

Updated : செப் 17, 2022 | Added : செப் 17, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
வத்தலக்குண்டு : வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க அரசாணையை இருந்தும் அதை செயல்படுத்தாத நிலையில்,தற்போது வைகை அணையில் போதுமான தண்ணீர் உள்ளதால் அரசாணையை செயல்படுத்தி தண்ணீர் திறந்து விட விருவீடு பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.. வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய் உசிலம்பட்டி தாலுகாவிற்காக ஏற்படுத்தப்பட்டது. அதன்
வத்தலக்குண்டு, வைகை அணை, விவசாயிகள், Vathalakundu, Vaigai Dam, Farmers,



வத்தலக்குண்டு : வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க அரசாணையை இருந்தும் அதை செயல்படுத்தாத நிலையில்,தற்போது வைகை அணையில் போதுமான தண்ணீர் உள்ளதால் அரசாணையை செயல்படுத்தி தண்ணீர் திறந்து விட விருவீடு பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..
வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய் உசிலம்பட்டி தாலுகாவிற்காக ஏற்படுத்தப்பட்டது. அதன் வழித்தடத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2500 ஏக்கர் நிலம், மூன்று கண்மாய்கள் பயன்பெறும் அளவிற்கு திட்டமிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சோதனை ஓட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது கரை அமைத்து பல ஆண்டுகள் ஆனதால் மண் கரைகள் உடைந்தன. அவை சரிபார்க்கப்பட்டு 2021ல் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிப்படைந்தது. வைகை அணையில் 69 அடி இருக்கும் போது உபரி நீர் இந்த கால்வாய் வழியாக வெளியேற்றவும் அரசாணை வெளியிடப்பட்டது. சில நாட்களாக வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்ததால் அணியின் நீர்மட்டம் அதிகரித்து 72 அடியை எட்டியது. இதனால் அவ்வப்போது நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. 9000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணை நீர் 69 அடியை தாண்டியதால் விருவீடு பகுதி விவசாயிகள் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உள்ளனர்.



குடிநீர் தட்டுப்பாடு இருக்காது


தர்மர், ஊராட்சித் தலைவர், விருவீடு: 2021ல் உபரி நீர் திறந்து விட்டதால் கண்மாய்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. தற்போது தண்ணீர் திறந்து விட்டால் வரும் காலங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. கண்மாய்களில் தண்ணீர் நிரம்பும்போது எங்கள் பகுதியில் நெல் விவசாயமும் செய்வதற்கான சூழல் ஏற்படும்.


சென்றவர்கள் வருவர்


இரும்புத்துரை, விவசாய சங்கத் தலைவர், விருவீடு: வைகை அணை நிரம்பியதும் உபரி நீர் கேட்டு நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். இதுவரை தண்ணீர் திறக்கவில்லை. அரசாணையை அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கால்வாயில் தண்ணீர் வந்தால் வெளி மாவட்டங்களுக்கு பிழைப்பை தேடிச் சென்றவர்கள் மறுபடியும் சொந்த ஊரிலேயே விவசாயம் செய்து பிழைத்துக் கொள்வர்.


வாழ்வில் ஒளி ஏற்றுங்க



சிவப்பிரகாஷ், விவசாயி: 58-ம் கால்வாயில் மண்கரை உள்ள பகுதியில் ரூ 60 கோடியில் சிமென்ட் கால்வாய் அமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.அரசும் ஒப்புதல் அளித்து பல மாதங்கள் ஆகிவிட்டது. உடனடியாக அரசாணை வெளியிட்டு ,உசிலம்பட்டி நிலக்கோட்டை தாலுகா விவசாயிகள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
17-செப்-202208:12:20 IST Report Abuse
VENKATASUBRAMANIAN அதற்கெல்லாம் நேரம் இல்லை. நாற்பதும நமதே முக்கியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X