ஏ.டி.எம்., மிஷினை உடைக்க முயன்ற 4 பேர் கைது| Dinamalar

ஏ.டி.எம்., மிஷினை உடைக்க முயன்ற 4 பேர் கைது

Added : செப் 17, 2022 | |
சென்னை: தாம்பரத்தில், எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., மையத்தை உடைக்க முயன்ற நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். தாம்பரம் மெப்ஸ் வளாகம் எதிரே, எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., மையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு, இந்த மையத்தை உடைக்க, மர்ம நபர்கள் முயற்சி செய்தனர். இதை அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம், டில்லியில் உள்ள தலைமை அலுவலகம் கண்டுபிடித்தது. பின், அங்கிருந்து, தாம்பரம் காவல்

சென்னை: தாம்பரத்தில், எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., மையத்தை உடைக்க முயன்ற நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.



தாம்பரம் மெப்ஸ் வளாகம் எதிரே, எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., மையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு, இந்த மையத்தை உடைக்க, மர்ம நபர்கள் முயற்சி செய்தனர். இதை அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம், டில்லியில் உள்ள தலைமை அலுவலகம் கண்டுபிடித்தது. பின், அங்கிருந்து, தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, இரவு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



இதில், சுத்தியல் உள்ளிட்ட பொருட்களுடன் சுற்றித்திரிந்த நான்கு பேரை பிடித்தனர். விசாரணையில், சீர்காழியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், 22, மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த மணிகண்டன், 20, உள்ளிட்ட நான்கு பேர் என்பது தெரியவந்தது. மேலும், ஏ.டி.எம்., மிஷினை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும், தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X