சுட்டிக்காட்டி, வாழைப்பழத்துல ஊசியை ஏத்திட்டீங்களே !

Updated : செப் 17, 2022 | Added : செப் 17, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை: தமிழகத்தில் கல்வியறிவின்மை, சுகாதார சவால்கள் மற்றும் வேலையின்மை காரணமாக போராடுகிற, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர், குருவிக்கார சமூகங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை, தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது.மத்திய அரசை பாராட்டுற சாக்குல,


தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை:

தமிழகத்தில் கல்வியறிவின்மை, சுகாதார சவால்கள் மற்றும் வேலையின்மை காரணமாக போராடுகிற, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர், குருவிக்கார சமூகங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை, தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது.



latest tamil news




மத்திய அரசை பாராட்டுற சாக்குல, மாநில அரசு, 30 ஆயிரம் நரிக்குறவர்களை கண்டுக்காம இருப்பதை சுட்டிக்காட்டி, வாழைப்பழத்துல ஊசியை ஏத்திட்டீங்களே!





தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:

2006 - 11 தி.மு.க., ஆட்சியில், நிலங்களை சொந்தக்காரர்களுக்கு தெரியாமல், தி.மு.க.,வினர் அபகரித்தனர். அதனால், பலர் வழக்குகளை எதிர்கொள்ள நேர்ந்தது. இப்போது நுாதன முறையில், சில முஸ்லிம் அமைப்புகள் வழியே, வக்பு போர்டு சட்டத்தை உபயோகப்படுத்தி, நிலங்களை அபகரிக்க திட்டம் போட்டு செயல்பட்டு வருகின்றனர். அதன் முதல் முயற்சியே திருச்செந்துறை கிராமம்; இது, தற்காலிகமாக முறியடிக்கப்பட்டிருக்கிறது.


போற போக்கை பார்த்தால், நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு, மீண்டும் உயிர் கொடுக்கணும் போலிருக்குதே!





பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்திருக்கிறார். அறிவு தீனி தேடி வரும் மாணவ செல்வங்களின் வயிற்றுப்பசியை போக்குவதற்கான இந்த திட்டம் நல்ல துவக்கமாகும். மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுகளில், படிப்படியாக சிறு தானியங்களை சேர்த்து, அவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த வேண்டும்.


உங்க நியாயமான கோரிக்கையான, 'டாஸ்மாக்'கை தான் மூட மாட்டேங்கிறாங்க... இதையாவது கேட்கிறாங்களான்னு பார்ப்போம்!





பிரதமர் மோடிக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம்:

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் கருத்துருவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; இதற்கு நன்றி. நரிக்குறவர்கள் பயன் பெற, அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, ஜெயலலிதா தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். தற்போது, மத்திய அரசின் முடிவால், ஜெயலலிதா கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.


latest tamil news




இதையே சாக்காக வைத்து, 'நன்றி சொல்ல வர்றேன்'னு பிரதமரை பார்க்க, டில்லிக்கு டிக்கெட் போட்டுட வேண்டியது தானே!





இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலர் அபுபக்கர் பேட்டி:

அடுத்தாண்டு மார்ச் 10ல், சென்னை ராஜாஜி அரங்கில், முஸ்லிம் லீக் மாநாடு நடக்கிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். தேசிய அளவில் ஸ்டாலினுக்கு, மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும்.


உங்க மாநாட்டுல கலந்துக்கிறதால மட்டுமே, ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக்க நினைப்பது, உங்களுக்கே ஓவரா தெரியலையா?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
17-செப்-202219:48:20 IST Report Abuse
vbs manian மாலை சிற்றுண்டி காபியும் கொடுக்கலாம்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
17-செப்-202218:40:01 IST Report Abuse
DVRR தேசிய அளவில் ஸ்டாலினுக்கு, மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும்???
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
17-செப்-202218:35:29 IST Report Abuse
DVRR ?தனக்குத்தானே வேட்டு வைத்துக்கொண்ட???அதாவது இதுவரையில் மத்தியில் ஆட்சி செய்த நேரு காங்கிரஸ் என்ன செய்தது என்பதை இதை விட தெளிவாகக்கூற முடியாது???என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X