இந்தியாவில் மேலும் 5,747 பேருக்கு கோவிட்

Added : செப் 17, 2022 | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,747 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,747 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,28,524 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 5,618 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து
India, இந்தியா, covid, கொரோனா, கோவிட்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,747 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,747 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,28,524 ஆனது.
கடந்த 24 மணி நேரத்தில், 5,618 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,39,53,374 ஆனது. தற்போது 46,848 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கோவிட் காரணமாக 16 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,302 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 216.41 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X