வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்து வருகிறார். உண்மையான சமூகநீதியை நிலை நிறுத்திய பிறந்தநாளான இன்றே சமூக நீதி நாள் என மத்திய அமைச்சர் முருகன் கூறினார்.
சென்னையில் சர்வதேச கடலோர துய்மை தினத்தையொட்டி ஸ்வச் சாகர், சுரஷித் சாகர் எனும் கடற்கரைகளின் மாபெரும் தூய்மைப் பணி திட்டத்தை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் முருகன் துவக்கி வைத்து, கடற்கரையில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தார்.

மத்திய புவி அறிவியல் அமைச்சகம், தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம், மத்திய அறிவியல் தொழில் நுட்ப துறை அமைச்சகம் ஆகியவை பல்வேறு தன்னார்வ அமைப்புகள், கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து தூய்மையான கடற்கரை பாதுகாப்பான கடல் என்ற தலைப்பில் மாபெரும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் மத்திய அமைச்சர் முருகன் செய்தியாளருக்கு அளித்த பேட்டி: இன்றைக்கு வரலாற்றின் முக்கியமான நாள் சர்வதேச கடலோர துய்மை தினம். நம் பிரதமரின் தூய்மை இந்தியா கனவில் மெய்ப்பிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
கடல் வளம் நமக்கு இயற்கை கொடுத்த வரம். அதனை நாம் சுத்தம் செய்தல் வேண்டும். இது நமது ஒவ்வொருவரின் பொறுப்பு மட்டும் கடமை ஆகும். கடல் என்பது மீனவர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திலும் பங்கு வகிக்கிறது. கடல்சார் ஏற்றுமதியில கொரோனா காலத்திலும் கூட 32% அதிகம் ஏற்றுமதி செய்திருக்கிறோம்.
பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்து வருகிறார். உண்மையான சமூகநீதியை நிலை நிறுத்திய பிறந்தநாளான இன்றே சமூக நீதி நாள். பிரதமர் மோடியின் பிறந்த நாளான என்பதால் நாடும்முழுவது இன்று முதல் அக்.,2 வரை சேவை வாரமாக கொண்டாடிகொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.