'நம் வலிமை மக்கள் சக்தியை அடிப்படையாகக் கொண்டது. நம் வலிமை, நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் சார்ந்தது' - - பிரதமர் மோடி
மக்கள் பங்கேற்பு என்ற தத்துவம், அரசின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில், 'கூட்டுப் பங்கேற்பு' என்ற பொருள்படக் கூடியது. மக்கள் சக்தியைப் பயன்படுத்துவது தான், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மையக்கருவாக உள்ளது. மக்கள் சக்தியைப் பயன்படுத்துவதால், தங்களால் இயன்ற அளவு பாடுபடுவதற்கு, மக்களை தீவிரமாக ஊக்குவிப்பதன் மூலம், தவறுகள் நடைபெறாமல் தடுப்பது; கொள்கைகளை நடைமுறைப்படுத்தும்போது எழக்கூடிய பிரச்னைகளை, அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன், ஆட்சி நிர்வாகத்திற்கு உதவும்படி, மற்றவர்களையும் ஊக்குவிப்பது உள்ளிட்ட பலன்கள் ஏற்படும் என்பதை, பிரதமர் மோடி உணர்த்தியுள்ளார்.
பேச்சுவார்த்தை: சிறந்த ஆட்சிக்கான சாதனம்
மக்கள் பங்கேற்பு என்பது, அதன் தொடர் நடவடிக்கையான மக்கள் பேச்சுவார்த்தை இன்றி முழுமை பெறாது. உண்மையான பங்கேற்பு ஆட்சி என்பதன் சாராம்சம், கள நிலவரத்தைப் புரிந்து கொள்ள, மக்களுடன் அவ்வப்போது கலந்துரையாடுவதுடன், அவர்களைக் கையாளுவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்து, பிரச்னைகளை பகுப்பாய்வு செய்வதை சார்ந்தது ஆகும். கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதுடன், தத்துவ ரீதியாக அவற்றைப் பின்பற்றச் செய்து, மக்கள் கருத்தை அறிவதும் இதில் அடங்கும்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி, அவர்களுக்கு அதிகாரமளித்து, மக்களுக்கும், அரசுக்கும் இடையே நிலையான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, அதிக கவனம் செலுத்துகிறது.
இதற்கு சிறந்த உதாரணமாக, பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைக் குறிப்பிடலாம்.
ஏனெனில், விவசாயிகளின் கருத்துக்களை அறிந்து, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, பயிர்க் காப்பீட்டிற்கான இரண்டு பெரிய திட்டங்களை ஒருங்கிணைத்து, நீடித்த வேளாண்மையை உறுதி செய்யும் விதமாக, 2016-ல் இத்திட்டத்தை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி.
மக்கள் சார்ந்த வளர்ச்சி யுகம்
தாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வாயிலாக, கடைக்கோடியில் உள்ள மக்களையும் ஊக்குவிப்பதில், பிரதமர் மோடி மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.ஒருமுறை, இருமுறை அல்ல... பிரதமர் அழைப்பு விடுக்கும்போதெல்லாம், அவரது முயற்சிகள், யதார்த்த ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. எனினும், மக்களின் முழுமையான வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பொறுத்தவரை, மக்கள் பிரதமரின் வார்த்தைகளை வேத வாக்காகக் கருதி, செயல்படுகின்றனர். தம் தொலைநோக்கு மற்றும் ஆட்சி நிர்வாகம் வாயிலாக, கொள்கைகளை வகுப்பதிலும், அவற்றின் பலன் மக்கள் அனைவரையும் சென்றடையச் செய்வதில், குடிமக்கள் அனைவரையும் ஈடுபடுத்துவதிலும், ஒரு தலைவர் என்ற முறையில், பிரதமர் மோடியின் உறுதிப்பாடு சிறந்தது. குறிப்பாக, 'துாய்மை இந்தியா இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், 200 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் கோவிட்- 19 தடுப்பூசி' செலுத்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
பங்கேற்பிலிருந்து வளமையை நோக்கி...
'மனதின் குரல்' நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றிருப்பதுடன், பரவலாக ஒரு சமூகப் புரட்சியாகவே கருதப்படுவதுடன், மக்கள் பங்கேற்பு என்பதற்கும் அடித்தளமாக கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு தனிநபரிடமும் காணப்படும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி உள்ளது என்பதில், பிரதமர் மோடி வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை நினைவூட்டுவதாக உள்ளது.
'தற்சார்பு இந்தியா' இயக்கத்தின் ஒரு அங்கமாக, உள்நாட்டிலேயே பொம்மை உற்பத்தி செய்ய வேண்டுமென, பிரதமர் விடுத்த அழைப்பும், ஒரு தனித்துவமானது.
'ஜனநாயகம் என்பது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு அரசை நடத்துவதற்கான ஒப்பந்தம் மட்டுமல்ல... உண்மையில், இது தான் மக்கள் பங்கேற்பு' - பிரதமர் மோடி
நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு, தொடர்ந்து நல்ல பலன்களை அளித்து வருகிறது. ஜனநாயகம், உண்மையிலேயே வெற்றி பெற்றதாக கருதும்போது தான், அரசின் கொள்கைகள், கடைக்கோடியில் உள்ளவர்களையும் சென்றடையும். எனவே, பிரதமர் மோடியின் அழைப்பு எப்போதும் பொருந்துகிறது; அனைவரது பங்கேற்பு, அனைவரது வளத்திற்கு வழிவகுக்கும்.
ஜெகத் பிரகாஷ் நட்டா
பா.ஜ., தேசியத் தலைவர்