சங்கரன்கோவிலில் தீண்டாமை கொடுமை: இருவர் கைது, கடைக்கு சீல்

Updated : செப் 17, 2022 | Added : செப் 17, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது எனக் கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில்
தீண்டாமை, சங்கரன்கோவில்,  பள்ளி குழந்தைகள், Untouchability, Sankarankoil, School Children,

தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது எனக் கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் தாசில்தார் பாபு முன்னிலையில் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. பெட்டிக்கடை உரிமையாளர் மகேஸ்வரன் மற்றும் ராமச்சந்திர மூர்த்தி இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


காரணம் என்ன?


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து ஊர் மக்கள் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்தி, அதன் முடிவில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடைகளில் எதுவும் கொடுக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றபட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
17-செப்-202220:45:03 IST Report Abuse
அசோக்ராஜ் தலைச் சீட்டா தென்காசி பக்கமே தலை வெச்சுப் படுக்க மாட்டான். கோழை. மைலாப்பூரில் கம்பு சுத்துவான்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
17-செப்-202220:43:27 IST Report Abuse
அசோக்ராஜ் தென்காசி பக்கமே தலை வெச்சுப் படுக்க மாட்டான். மைலாப்பூரில் கம்பு சுத்துவான்.
Rate this:
Cancel
raja - Bangalore,இந்தியா
17-செப்-202217:43:03 IST Report Abuse
raja என்ன கட்டுப்பாடு தமிழா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X