நாளை தடுப்பூசி முகாம்

Added : செப் 17, 2022 | |
Advertisement
சென்னை: மத்திய அரசின் இலவச கொரோனா தடுப்பூசிக்கான காலம் முடிய 14 நாட்களே இருப்பதால், நாளை நடைபெறும் முகாமில் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என, மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து, சென்னை மாநகாரட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சியில், 37வது மெகா தடுப்பூசி முகாம் நாளை 2,000 இடங்களில் நடைபெற உள்ளது. மேலும், 18 வயது முதல் 59 வயதுக்கு

சென்னை: மத்திய அரசின் இலவச கொரோனா தடுப்பூசிக்கான காலம் முடிய 14 நாட்களே இருப்பதால், நாளை நடைபெறும் முகாமில் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என, மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து, சென்னை மாநகாரட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சியில், 37வது மெகா தடுப்பூசி முகாம் நாளை 2,000 இடங்களில் நடைபெற உள்ளது. மேலும், 18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டோருக்கான இலவச 'பூஸ்டர்' தவணைக்கான கால அவகாசம், இம்மாதம் 30ம் தேதியுடன் முடிவடைகிறது.

சென்னையில் 42.35 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் போட தகுதியானவர்கள். அவர்களில் 6.04 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.மத்திய அரசின் இலவச கொரோனா தடுப்பூசிக்கான காலம் முடிய 14 நாட்களே உள்ள நிலையில், மீதமுள்ளவர்கள் இலவச பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X