பிரதமர் மோடி படத்தை ஆப்பிளில் செதுக்கி சாதனை படைத்த ஓவியர்

Added : செப் 17, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த ஓவியர் கார்த்தி பிரதமர் மோடி படத்தை ஆப்பிளில் செதுக்கி அனைவரையும் கவர்ந்து வருகிறார்.மானாமதுரை கன்னார் தெரு பகுதியைச் சேர்ந்த ஓவியர் கார்த்தி 35, ஓவியரான இவர் சிறு வயதிலிருந்து ஓவியக்கலையில் சிறந்து விளங்கி வருகிறார். மேலும் பள்ளி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓவியங்கள் வரைய கற்றுக் கொடுத்து வருகிறார். இவர்
 பிரதமர்மோடி, ஆப்பிள், ஓவியர், Modi, Narendramodi,

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த ஓவியர் கார்த்தி பிரதமர் மோடி படத்தை ஆப்பிளில் செதுக்கி அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
மானாமதுரை கன்னார் தெரு பகுதியைச் சேர்ந்த ஓவியர் கார்த்தி 35, ஓவியரான இவர் சிறு வயதிலிருந்து ஓவியக்கலையில் சிறந்து விளங்கி வருகிறார். மேலும் பள்ளி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓவியங்கள் வரைய கற்றுக் கொடுத்து வருகிறார். இவர் பழங்கள் மற்றும் இலை ஆகியவற்றில் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள் என அனைவரையும் புதுமையான முறையில் ஓவியங்களாக செதுக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் இன்று(செப்.,17) பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்தை ஒரு ஆப்பிளில் அப்படியே செதுக்கி அதனை பொதுமக்கள் பார்வைக்காக வைத்துள்ளார். இதனை ஏராளமான பா.ஜ.,வினர் மற்றும் பொதுமக்கள் சென்று பார்வையிட்டு ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து ஓவியர் கார்த்தி கூறுகையில், கடந்த 10 வருடங்களாக இந்தியாவை அனைத்து துறைகளிலும் முன்னணியில் கொண்டு செல்லும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.அவரது புகழை பரப்பும் வகையில் அவரது பிறந்த நாளான இன்று வாழ்த்தும் வகையில் ஆப்பிளில் அவரது உருவப்படத்தை செதுக்கி வைத்துள்ளேன். இதனை பிரதமர் மோடிக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகிறேன் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Democracy - Madurai,இந்தியா
18-செப்-202201:16:07 IST Report Abuse
Democracy ஃபிரிஜ்ஜில தான் வைக்கலாம். அதுவும் கொஞ்ச நாளைக்கு தான்.. அப்புறம் அழுகிடும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X