800 மெகா வாட் மின் உற்பத்தி: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

Added : செப் 17, 2022 | |
Advertisement
கோவை: 'வரும், டிச., மாதம் முதற்கட்டமாக, 800 மெகா வாட் மின் உற்பத்தியை துவங்குவதற்கான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன,'' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். கோவை, ராமநாதபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில், காலை உணவு திட்டத்தை, அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:கோவை மாநகராட்சிக்கு சாலை வசதிக்காக, 200 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்

கோவை: 'வரும், டிச., மாதம் முதற்கட்டமாக, 800 மெகா வாட் மின் உற்பத்தியை துவங்குவதற்கான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன,'' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கோவை, ராமநாதபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில், காலை உணவு திட்டத்தை, அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:கோவை மாநகராட்சிக்கு சாலை வசதிக்காக, 200 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். முதல்கட்டமாக, 26 கோடி நிதியை, 125 புதிய சாலைகளுக்கு ஒதுக்கியுள்ளார்.

வீடுகள், குடிசைகள் இருக்கும், 2.37 கோடி மின் நுகர்வோர்களில், ஒரு கோடி நுகர்வோருக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.அடுத்து இருக்கும், 63.35 லட்சம் பேருக்கு, இரு மாதமும் சேர்த்து, 55 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு, 3,217 கோடி ரூபாய் உயர்த்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த மின் கட்டணம், தற்போது குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாம் குறைந்தபட்சம், 25 சதவீதம் தான் சொந்தமாக மின் உற்பத்தி செய்கிறோம். மீத மின்சாரத்தை வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலில் மின்துறை உள்ளது.

வரும் ஐந்து ஆண்டுகளுக்குள், 6,220 மெகா வாட் கூடுதல் நிறுவுதிறனை, தமிழ்நாடு மின்வாரிய உற்பத்தியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.புதிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தி, வரும், டிச., மாதம் முதற்கட்டமாக, 800 மெகா வாட் மின் உற்பத்தியை துவங்குவதற்கான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. 316 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற தி.மு.க., தேர்தல் வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X