'மது, உறவு, சண்டை...ரிப்பீட்டு'; மைக் டைசன் சொன்ன பால்யகால சம்பவம்

Updated : செப் 17, 2022 | Added : செப் 17, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
'உலகின் கெட்ட மனிதன்' எனப் பெயர் பெற்ற முன்னாள் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' படத்தில் வில்லன் கதாப்பாத்திரமேற்று நடித்திருந்தார். பாக்ஸிங் ரிங்கில் எதிராளிகளை அலறவிட்டு பலமுறை ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம் வென்ற மைக் டைசன் பணத்துக்காக இவ்வாறு சினிமா ஹீரோவிடம் எதற்காக அடிவாங்குகிறார், இந்த வயதுக்குமேல்
Mike Tyson, Boxing, Undisputed Truth, மைக் டைசன்,  குத்துச்சண்டை, அண்டிஸ்பியூட்டட் ட்ரூத், லைகர், liger,

'உலகின் கெட்ட மனிதன்' எனப் பெயர் பெற்ற முன்னாள் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' படத்தில் வில்லன் கதாப்பாத்திரமேற்று நடித்திருந்தார். பாக்ஸிங் ரிங்கில் எதிராளிகளை அலறவிட்டு பலமுறை ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம் வென்ற மைக் டைசன் பணத்துக்காக இவ்வாறு சினிமா ஹீரோவிடம் எதற்காக அடிவாங்குகிறார், இந்த வயதுக்குமேல் அவர் எதற்காக பணத்தைத் தேடி ஓடுகிறார் போன்ற பல விவாதங்கள் இணையத்தில் வலம்வந்து கொண்டிருக்கின்றன.

நெட்டிசன்களுக்குத் தெரியாத மைக் டைசனின் பால்ய காலம் ஒன்று உண்டு. வறுமை மற்றும் பாலியல் விஷயங்கள் அவரது வாழ்க்கையில் எப்படி கோரதாண்டவமாடியது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டர். மைக் டைசன் தனது வாழ்க்கை வரலாற்றை 'மைக் டைசன், அண்டிஸ்பியூட்டட் ட்ரூத்' என்கிற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவரது பால்ய காலம் குறித்து அவரே விவரிக்கும் சில வரிகளைப் பார்க்கலாம்.


latest tamil news'எனது தாயார் லோர்னா மா, வெர்ஜீனியாவில் பிறந்தவர். ஆனால் நாங்கள் எவ்வாறு ப்ரூக்ளின் வந்தோம், எனது தந்தை யார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நான், எனது சகோதரி, மூத்த சகோதரர், அம்மா இதுதான் எங்கள் குடும்பம். அடித்தட்டு அமெரிக்க கருப்பின மக்கள் வசிக்கும் நெருக்கமான கட்டடங்கள் கொண்ட நியூயார்க்கைச் சேர்ந்த அழுக்கு படிந்த பகுதி ஃப்ரூக்ளின். தினக்கூலிகள் வசிக்கும் அப்பகுதியில் தெருவெங்கும் பாலியல் சார்ந்த பேச்சுக்களும், கெட்ட வார்த்தைப் பிரயோகங்களும் சகஜம்.

எனது சகோதரி, சகோதரர் ஆகியோருக்கு தூங்க தனி அறைகள் உண்டு. நான் சிறுவயது முதலே அம்மா பிள்ளை. எப்போதும் அம்மாவுடனேயே உறங்குவேன். அப்போது நடு இரவில் எனது தாயாரின் காதலன் எட்டி காலிசன் மதுபோதையுடன் திடீரென வீட்டுக்கு வருவார். மது அருந்துவது, சண்டையிடுவது, உறவு கொள்வது, மீண்டும் மது, சண்டை, உறவு இதுவே எனது தாயார் மற்றும் எட்டியின் இரவு செயல்கள்.

சில முக்கிய இரவுகளில் வீட்டில் நடக்கும் மது விருந்தின்போது எனது தாயார் எட்டி-யை மூர்க்கமாகத் தாக்கிவிட்டு வெளியே சென்றுவிடுவார். எட்டி எனது தாயாரின் தோழிகளை மதுபோதையின் போது தனது இச்சைக்குப் பயன்படுத்திக்கொள்வார். ஒருமுறை எட்டி வழக்கம்போல மது அருந்திவிட்டுத் தகராறில் ஈடுபட, எட்டிமீது கொதிக்கும் நீரை ஊற்றினார் என் தாயார். அதில் சில துளிகள் என் பிஞ்சு உடலிலும் சிந்திவிட, நான் வலியால் துடித்தேன்.

முகம் முழுக்க சூடுபட்ட கொப்புளங்களுடன் எட்டி நான் வலியால் துடிப்பதைக் கண்டு பரிதாபப்பட்டார். எனது தயாரை கெட்ட வார்த்தைகளில் வசவு பாடினார். அன்றிலிருந்து நாங்கள் எட்டியை எங்களது பெரிய நண்பராக ஏற்றுக்கொண்டோம். காதல் என்றால் சண்டையிடுவது, பின்னர் காமத்தால் மீண்டும் ஒன்று கூடுவது என என் சிறுவயதிலேயே நான் மனதில் பதிவு செய்துகொண்டேன்.


latest tamil newsசிறுவயதில் ஞாயிறன்று மட்டும் நாங்கள் அனைவரும் வயிறார சாப்பிடுவோம். ஒவ்வொரு ஞாயிறன்றும் எங்கள் பகுதிக்கு இலவச உணவு வழங்கப்படும். அந்த உணவுபெறும் வரிசையில் தட்டுடன் நிற்கும் நான், உணவுப் பணியாளர்களிடம் எனக்கு ஒன்பது உடன் பிறந்த சகோதரர்கள் இருப்பதாக பொய் கூறி அதிக சாண்விட்சுகளையும் ரொட்டிகளையும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேருவேன்.'

இப்படி ஏழ்மை மற்றும் மோசமான சூழலில் வளர்ந்ததால் அதன் தாக்கம் அவரை இப்போது வரை தொடர்கிறது. சம்பாதித்த பணத்தை மது, ஆடம்பர வாழ்க்கை என செலவிட்டு தீர்த்ததால், தற்போது விஜய் தேவரகொண்டாவிடம் அடிவாங்கும் நிலைக்கு வந்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Bangalore,இந்தியா
17-செப்-202219:53:33 IST Report Abuse
raja ஒழுக்கம் தவறி போவதற்கு எல்லாரிடமும் குறைந்தபட்சம் ஒரு கதையாவது இருக்கும். மனசாட்சிக்கு மனிதன் பயப்படுவதை நிறுத்திக்கொண்டால், உலகம் U டர்ன் எடுத்து மீண்டும் காட்டுவாசி வாழ்கைக்கே சென்றுவிடும். இந்த மனிதர் குறைந்தபட்சம் கடவுளுக்கு பயந்தவராக வளர்க்கப்பட்டிருந்தால், இவரது திறமை நல்ல மனிதனின் உதாரணமாக வெளிவந்திருக்கும். இன்று சினிமாவில் கிருத்தவர்கள் அப்பாவிகளாகவும், கருணையுள்ளதோடு பிறரை காக்கும் கருணை இல்லங்களை கொண்டவர்களாகவும் காட்டுகிறார்கள், ஆனால் அடிப்படை கிருத்தவ நாடுகளில் அது நிலை அல்ல போலும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X