'கேள்வி கேட்கும் குழந்தைகள்விஞ்ஞானி ஆகலாம்'

Added : செப் 17, 2022 | |
Advertisement
கோவை மண்டல அறிவியல் மையத்தில், "நாளைய விஞ்ஞானி" என்ற புதிய திட்டம் அறிமுக விழா நேற்று நடந்தது. பல கோடி ருபாய் மதிப்புள்ள மண்டல அறிவியல் மையத்தில் உள்ள அறிவியல் பொருட்களின் அருமைகளையும், அறிவுசார்ந்த விஷயங்களையும் எடுத்துச் சொல்ல, நான்கு பேர் மட்டுமே பணியில் உள்ளனர். எனவே, தன்னார்வ தொண்டு நிறுவனம், "நம்ம கோவை" இயக்கம், "மேங்கோ எஜூகேஷன்" இணைந்து, "நாளைய

கோவை மண்டல அறிவியல் மையத்தில், "நாளைய விஞ்ஞானி" என்ற புதிய திட்டம் அறிமுக விழா நேற்று நடந்தது.

பல கோடி ருபாய் மதிப்புள்ள மண்டல அறிவியல் மையத்தில் உள்ள அறிவியல் பொருட்களின் அருமைகளையும், அறிவுசார்ந்த விஷயங்களையும் எடுத்துச் சொல்ல, நான்கு பேர் மட்டுமே பணியில் உள்ளனர். எனவே, தன்னார்வ தொண்டு நிறுவனம், "நம்ம கோவை" இயக்கம், "மேங்கோ எஜூகேஷன்" இணைந்து, "நாளைய விஞ்ஞானி" என்ற திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, தன்னார்வ தொண்டாக 10க்கும் மேற்பட்டோர், மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க பயிற்சி பெறுவர். திட்ட துவக்க விழாவில், கோவை கலெக்டர் சமீரன் பேசுகையில், "பிறக்கும் குழந்தைகள் வளரும் பருவத்தில், உலகை அறிய அதிக ஆர்வம் காட்டுகின்றன. தவழும் குழந்தைகளை, தாய் சொல்லும் "அதை தொடாதே, இதை தொடாதே...' என தொடங்கும் கட்டுப்பாடுகள், ஆசிரியர்களின் 'கேள்வி கேட்காதே' வரை தொடர்கிறது. இது குழந்தைகளின் அறியும் ஆர்வத்தை குறைத்து விடுகிறது. அறிவு வளர்ச்சிக்கு தடையாகி விடுகிறது. இவற்றையும் மீறி, அறிந்து கொள்ள ஆர்வம் உள்ள பள்ளி குழந்தைகள், புத்திசாலியாகின்றனர். ஏன், எதற்கு, எப்படி என அறிய ஆர்வம் உள்ள அனைவரும் விஞ்ஞானி ஆக முடியும்," என்றார். விழாவில், மண்டல அறிவியல் மையத்தின் அறிவியல் அலுவலர் லெனின் தமிழ்கோவன் வரவேற்றார். ராக் அமைப்பின் கவுரவ செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். கவுரவ விருந்தினராக, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பங்கேற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X