இதயத்தில் இருந்து பிறந்தவர்!

Added : செப் 17, 2022 | |
Advertisement
'அ ன்பை விட அதிகமாய்' '(Much More than love). - இது புத்தகம் அல்ல. தத்துகொடுக்கப்பட்ட குழந்தைகளின் மனதை காட்டும் கண்ணாடி. இதை எழுதியது, பள்ளி பயிலும் சிறுமி விருத்திகா ரெனே.இந்த புத்தகம், இன்று பேசும் பொருளாக மாறியுள்ளது. சிறுமியின் தாய் ரஷ்மி கூறியதாவது:எங்களது சொந்த ஊர் கேரள மாநிலம். நாங்கள் துபாயிலிருந்து, 2016ம் ஆண்டு கோவை வந்தோம். கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் விருத்திகாவை ஐந்து
இதயத்தில் இருந்து பிறந்தவர்!

'அ ன்பை விட அதிகமாய்' '(Much More than love).

- இது புத்தகம் அல்ல. தத்துகொடுக்கப்பட்ட குழந்தைகளின் மனதை காட்டும் கண்ணாடி. இதை எழுதியது, பள்ளி பயிலும் சிறுமி விருத்திகா ரெனே.இந்த புத்தகம், இன்று பேசும் பொருளாக மாறியுள்ளது. சிறுமியின் தாய் ரஷ்மி கூறியதாவது:எங்களது சொந்த ஊர் கேரள மாநிலம். நாங்கள் துபாயிலிருந்து, 2016ம் ஆண்டு கோவை வந்தோம். கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் விருத்திகாவை ஐந்து மாதக் குழந்தையாக தத்தெடுத்தோம். தற்போது பிளஸ் 1 பயின்று வருகிறார். பத்தாம் வகுப்பு பயிலும் போது, கல்விக்காக 'புராஜக்ட்' செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அவள் எழுதிய புத்தகம்தான், 'மச் மோர் தென் லவ்' எனும், 'அன்பை விட அதிகமாய்'.சில குழந்தைகள் வயிற்றில் இருந்து பிறக்கின்றன. சில குழந்தைகள் இதயத்தில் இருந்து பிறக்கின்றன. நீ எங்கள் இதயத்தில் இருந்து பிறந்தவள் என, நாங்கள் அவளிடம் தெரிவித்த போது, தான் தத்துக் குழந்தை என்பதை புரிந்து கொண்டு, மிகவும் வேதனை அடைந்தாள். அதன் பின் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினாள்.இந்த புத்தகத்தில் அவள் தத்துக்குழந்தையாக அடைந்த வேதனைகள், அதை அவள் எப்படி எதிர்கொண்டாள் என்பது குறித்து எழுதினாள். அதை குழந்தைகளை தத்தெடுப்பதற்காக காத்திருப்போரிடம் கொடுத்து, படிக்குமாறு தெரிவித்திருந்தார். அனைவரும் பாராட்டினார். அதன் பின்னரே, அதை புத்தகமாக வெளியிட திட்டமிட்டோம். புத்தகம் வெளியான பின் அவளது, தன்னம்பிக்கை மேலும் உயர்ந்து விட்டது. தற்போது தன்னை போல் நிறைய குழந்தைகள் இருப்பதை உணர்ந்து, அவர்களுக்காக குழு துவங்கி அவர்களுக்கு உள்ள சந்தேகங்கள், அச்சங்களை நிவர்த்தி செய்து வருகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X