டில்லி எய்ம்ஸ் பெயரை மாற்ற பேராசிரியர்கள் திடீர் எதிர்ப்பு

Added : செப் 17, 2022 | |
Advertisement
புதுடில்லி:புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயரை மாற்றக் கூடாது என வலியுறுத்தி, அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுதும் புதுடில்லி உட்பட 23 இடங்களில், எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இவற்றுக்கு, சுதந்திர போராட்ட தலைவர்கள், பல்வேறு துறைகளின் பிரபலங்களின் பெயர்களை சூட்டப்

புதுடில்லி:புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயரை மாற்றக் கூடாது என வலியுறுத்தி, அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

நாடு முழுதும் புதுடில்லி உட்பட 23 இடங்களில், எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இவற்றுக்கு, சுதந்திர போராட்ட தலைவர்கள், பல்வேறு துறைகளின் பிரபலங்களின் பெயர்களை சூட்டப் போவதாக மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் பேராசிரியர்கள் சங்கம் சார்பில், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய பெயர் சூட்டப் போவதாக அறிந்தோம். புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனை 1956ல் அமைக்கப்பட்டது. மருத்துவ கல்வி, ஆராய்ச்சி, நோயாளிகளை பாதுகாப்பது போன்ற உயரிய லட்சியங்களுக்காக இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டது.

புதுடில்லி எய்ம்ஸ் என்பது தான், அதற்கான தனித்துவமான அடையாளம். இந்த அடையாளத்தை இழந்தால், சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் இந்த மருத்துவமனைக்கு உள்ள அங்கீகாரம் பறிபோய் விடும். இதுபோன்ற காரணங்களுக்காகவே, வெளிநாடுகளில் உள்ள ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு பல்கலைகள்காலத்தை கடந்து இன்னும் பெருமை சேர்க்கின்றன.

அவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டால், அதன் அடையாளம் காணாமல் போய்விடும். எனவே, புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வேறு பெயர் சூட்டும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X