சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

இலக்கணம் தெரியலையே!

Added : செப் 17, 2022 | |
Advertisement
இலக்கணம் தெரியலையே!'இன்னும் பழமைவாதத்தில் ஊறித் திளைத்த அரசியல்வாதியாகவே உள்ளார். எப்போது தான், காலத்துக்கு ஏற்ப மாறுவாரோ தெரியவில்லை....' என, கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவ ரான ரமேஷ் சென்னிதலாவை, கிண்டலடிக்கின்றனர் சக அரசியல்வாதிகள்.இங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி


 அக்கம் பக்கம்


இலக்கணம் தெரியலையே!



'இன்னும் பழமைவாதத்தில் ஊறித் திளைத்த அரசியல்வாதியாகவே உள்ளார். எப்போது தான், காலத்துக்கு ஏற்ப மாறுவாரோ தெரியவில்லை....' என, கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவ ரான ரமேஷ் சென்னிதலாவை, கிண்டலடிக்கின்றனர் சக அரசியல்வாதிகள்.இங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. வரும், 2024ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், இங்கு கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று, செல்வாக்கை தக்க வைக்கும் முயற்சியில், காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.காங்கிரஸ் எம்.பி., ராகுல், கேரளாவில் ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அதற்கு முன்னதாக, இந்த யாத்திரையை மக்களிடம் பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளில், காங்., தலைவர்கள் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரான ரமேஷ் சென்னிதலா, மலப்புரம் மாவட்டத்தில், இரு சக்கர வாகன பேரணி நடத்தினார். இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, அவர் ஹெல்மெட் அணியவில்லை. அதைச் சுட்டிக்காட்டி, 'ஹெல்மெட் அணியாத சென்னிதலா மீது நடவடிக்கை பாயுமா...' என, சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சியினர் வேகமாக தகவல்களை பரப்பினர்.
காங்., நிர்வாகிகளோ, 'இப்போது எல்லாருடைய கைகளிலும், மொபைல் போன் உள்ளது. தவறு செய்தாலும், அதை யாருக்கும் தெரியாமல் செய்ய வேண்டும் என்ற, அரசியல் இலக்கணம் சென்னிதலாவுக்கு தெரியவில்லையே...' என, கிண்டலடிக்கின்றனர்.


அடி மீது அடி வைத்தால்...!



'சொந்தக் கட்சியில் உள்ளவர்கள், சொல்லி சொல்லி அலுத்து விட்டனர்; இப்போது, கூட்டணி கட்சியினர் வற்புறுத்தி வருகின்றனர். இதற்காவது பலன் கிடைக்குமா என்று பார்ப்போம்...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுலை பற்றி கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள். காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம், 17ல் நடக்கிறது. இதில், ராகுல் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானாலும், அந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் அவரைச் சந்தித்து, இதுகுறித்து வற்புறுத்தினர். அவரோ, 'தலைவர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என, ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்து விட்டேன். அந்த நிலையில் மாற்றமில்லை...' என, கறாராக கூறியதாக, கட்சிக்குள்ளேயே ஒரு பேச்சு நிலவுகிறது.
இதையடுத்து, ராகுலின் தீவிர விசுவாசிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். அதில், ராகுலை சமாதானப்படுத்தி, தேர்தலில் போட்டியிட வைக்கும் பொறுப்பை கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் ஒப்படைக்கலாம் என்று, முடிவெடுத்ததாக தெரிகிறது. பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார், சமீபத்தில் ராகுலை சந்தித்து, இது குறித்து வற்புறுத்தி உள்ளார். அடுத்த சில நாட்களில், மீண்டும் ராகுலை சந்திக்கவும் நிதிஷ் திட்டமிட்டுள்ளார். 'அடி மீது அடி வைத்தால், அம்மியும் நகரும்; ராகுல் நகர மாட்டாரா என்ன...' என, நம்பிக்கையுடன் காத்துள்ளனர், அவரது விசுவாசிகள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X